செய்திகள் :

இலங்கையால் விடுவிக்கப்பட்ட விசைப்படகுகளை மீட்க புறப்பட்ட 14 பேர் கொண்ட குழுவினர்

post image

இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட ராமேசுவரம், மண்டபம் பகுதியைச் சேர்ந்த 7 விசைப்படகுகளை மீட்டு கொண்டு வர ராமேசுவரத்தில் இருந்து இரண்டு விசைப்படகுளில் 14 பேர் கொண்ட குழுவினர் இலங்கை சென்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மற்றும் மண்டபம் துறைமுகங்களில் இருந்து கடந்த 2022-23 ஆம் ஆண்டு பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற சார்லஸ், ஹரிகரன், மைக்கேல்ராஜ், இருதயராஜ், தட்சிணமூர்த்தி, வேல்முருகன், வினால்டன் ஆகியோரின் 7 விசைப்படகுகள் மற்றும் மீனவர்களை இலங்கை கடற்பைடயினர் கைது செய்தனர். இதில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மீனவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் விடுதலை செய்யப்பட்ட மீனவர்களின் படகுகள் மீது தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது. இதில், அபராதத்துடன் படகுகள் விடுதலை செய்யப்பட்டன. இந்த படகுகள் தற்போது மயிலிட்டி, காங்கேசன் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. தமிழக மீனவர்கள் குழுவினர் இலங்கை சென்று படகுகளை மீட்டு கொண்டு வர அனுமதி கோரப்பட்டது. இதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, விடுதலை செய்யப்பட்ட படகுகள் பயன்படுத்தும் நிலையில் உள்ளதா என ஆய்வு மேற்கொள்ள ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீனவ சங்கத்தலைவர் ஜேசுராஜா தலைமையில் 7 படகு உரிமையாளர்கள் மற்றும் உதவியாளர்கள் என 14 பேர் கொண்ட குழுவினர் இரண்டு விசைப்படகுகளில் இலங்கை யாழ்பாணம் புறப்பட்டனர்.

தில்லி முதல்வர் ரேகா குப்தா தாக்குதல் வழக்கு: இரண்டாவது நபர் கைது

இந்த குழுவினர் விடுவிடுக்கப்பட்ட படகுகள் இருக்கும் துறைமுகத்திற்கு சென்று ஆய்வு செய்து இயங்கும் நிலையில் உள்ள படகுகளை மீட்டு கொண்டு வரவுள்ளனர் என குழுவினர் தெரிவித்துள்ளனர். மீனவர்கள் குழு இலங்கை செல்ல உள்ள நிலையில் இந்திய கடலோர காவல்படையினர் சர்வதேச எல்லை வரை பாதுகாப்புக்கு சென்று அங்கிருந்து இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைக்க உள்ளனர்.

இதன் பின்னர் இலங்கை கடற்படையினர் பாதுகாப்புடன் யாழ்பாணம் துறைமுகத்திற்கு செல்ல உள்ளனர்.

A team of 14 people from Rameswaram in two boats went to Sri Lanka to retrieve 7 boats from the Rameswaram and Mandapam areas that had been released by a Sri Lankan court.

நீங்கா நினைவில் வாழும் அண்ணன்... விஜயகாந்த் பிறந்தநாளுக்கு விஜய் வாழ்த்து!

மறைந்த நடிகரும் தேமுதிக கட்சியின் நிறுவன தலைவருமான விஜயகாந்த் பிறந்தநாளுக்கு, தவெக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.மறைந்த தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி பல்வேறு அரசியல் தலைவர... மேலும் பார்க்க

எம்.ஜி.ஆர் திரைப்பட வளாகத்தில் ஏசியுடன் கூடிய படப்பிடிப்புத்தளம்: திறந்து வைத்த முதல்வர்!

முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (ஆக. 25) தலைமைச் செயலகத்தில், சென்னை, தரமணியில் உள்ள தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன வளாகத்தில் ரூ. 5.10 கோடி செலவில் முழு அளவில்... மேலும் பார்க்க

நல்லகண்ணு உடல்நிலை: நலம் விசாரித்த விஜய்!

தலையில் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவிடம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நலம் விசாரித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட... மேலும் பார்க்க

ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்கிய விவகாரம்: அதிமுகவினர் 14 பேர் மீது வழக்குப்பதிவு!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிரசார கூட்டத்தில், ஆம்புலன்ஸை தடுத்து அதில் இருந்த ஓட்டுநர் தாக்கப்பட்ட விவகாரத்தில் அதிமுகவினர் 14 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.அதிமுக பொது... மேலும் பார்க்க

இபிஎஸ்ஸுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்த வழக்கை, சென்னை உரிமையியல் நீதிமன்றம் நிராகரிக்க மறுத்ததற்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவ... மேலும் பார்க்க

5 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்: வானிலை எச்சரிக்கை!

தமிழகத்தில் 5 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என்றும், ஆகஸ்ட் 27, 28ல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட அறிக்கையில், அடுத்த 48 மணி ந... மேலும் பார்க்க