செய்திகள் :

"தமிழ்நாடு முழுவதுமுள்ள CPIM அலுவலகங்களில் காதல் திருமணங்கள் நடத்திக் கொள்ளலாம்" - பெ.சண்முகம்

post image

தமிழ்நாட்டில் சாதி ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று ஆளும் தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. பல்வேறு சமூக அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன.

சமீபத்தில், தூத்துக்குடியைச் சேர்ந்த ஐ.டி ஊழியரான பட்டியலின இளைஞர் கவின் குமார் என்பவர், மாற்று சமூகத்தைச் சேர்ந்த காவல்துறை தம்பதியினரின் மகளை பரஸ்பரமாக காதலித்து வந்த நிலையில், அப்பெண்ணின் தம்பி சுர்ஜித் அவரை சாதி ஆணவப் படுகொலை செய்தது மாநில அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

அப்போது, தனிச் சட்ட கோரிக்கை மேலும் வலுவாக முன்வைக்கப்பட்டது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

ஆனால் தி.மு.க அரசோ, இருக்கின்ற எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டமே போதும் என ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கான சட்டம் என்ற பார்வையில் தனிச் சட்ட கோரிக்கையின்மீது பாராமுகம் காட்டி வருகிறது.

இந்த நிலையில், சாதி ஆணவப் படுகொலைகளுக்களைத் தடுக்க வருகிற சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே சட்டம் கொண்டு வர வேண்டும் என முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்தியிருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம், மாநில முழுவதுமுள்ள தங்களின் கட்சி அலுவலகங்களில் காதல் திருமணங்கள் நடத்திக் கொள்ளலாம் என அறிவித்திருக்கிறார்.

சென்னையில் நேற்று நடைபெற்ற `ஆணவக் கொலைகளுக்கெதிரான சமூகநீதிக் கருத்தரங்கம்' நிகழ்ச்சியில் பேசிய பெ. சண்முகம், "தமிழ்நாட்டில் சாதி மறுப்பு திருமணங்கள் செய்து கொள்ள தனி ஏற்பாடுகள் இல்லை.

எனவே, தமிழ்நாடு முழுவதும் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களில் காதல் திருமணங்கள் நடத்திக் கொள்ளலாம்.

காதலர்களுக்காக மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகங்கள் திறந்தே இருக்கின்றன. பொதுச் சமூகத்தில் ஆணவக் கொலைக்கு எதிரான நிலை உருவாகியிருக்கிறது.

இந்த சூழலை அரசு பயன்படுத்திக் கொண்டு, வருகிற சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே சாதி ஆணவக் கொலை தடுப்பு சட்டத்தை முதலமைச்சர் கொண்டு வர வேண்டும்" என்று கூறினார்.

'நக்சல்களுக்கு உதவியவர்' - சுதர்ஷன் ரெட்டியை விமர்சனம் செய்த அமித் ஷா; கிளம்பிய எதிர்ப்பு!

தமிழ்நாட்டை இன்னும் பாஜக-வால் பிடிக்க முடியவில்லை என்பது அந்தக் கட்சியினருக்கு பெரும் கவலை. அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இந்த நிலையில் தான், திடீரென்று கடந்த ஜூலை மாதம் 21... மேலும் பார்க்க

Iran: ``அடிபணிய வைக்க முயற்சிக்கிறது... பெரிய அவமானம்" - அயதுல்லா கமேனி சொல்வதென்ன?

ஈரான் அணுசக்தி விவகாரம்2015-ல், ஈரான் மற்றும் ஐரோப்பிய நாடுகள் (பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி) அமெரிக்கா இணைந்து ஓர் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இதன் மூலம் ஈரான் தனது அணுசக்தி செறிவூட்டலை கு... மேலும் பார்க்க

DMDK: 2026-ல் 'மக்கள் உரிமை மீட்பு மாநாடு' - பிரேமலதா தலைமையில் தேர்தலுக்கு தயாராகும் தேமுதிக!

2026ம் ஆண்டு தேர்தல் வரவிருக்கும் நிலையில் கட்சிகள் தங்கள் கட்டமைப்பை புனரமைக்கவும் வலுப்படுத்தவும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்தவகையில் தங்களது கட்சியின் மாநில மாநாட்டை அறிவித்துள்ளது தேமுதிக. கே... மேலும் பார்க்க

TVK: "விஜய், விஜயகாந்த் இடத்தை பூர்த்தி செய்வார்..." - தாடி பாலாஜி பேசியது என்ன?

இன்று மறைந்த நடிகரும் அரசியல் தலைவருமான விஜயகாந்த் பிறந்தநாள். அவருக்கு பல்வேறு தலைவர்கள் அரசியல், சமூக ஆளுமைகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் ஆதரவாளரான தாடி... மேலும் பார்க்க

கோவை: ``மது, பாலியல் சீண்டலில் அரசு பள்ளி ஆசிரியர்கள்" - நயினார் நாகேந்திரனின் குற்றச்சாட்டு

கோவையின் கிணத்துக்கடவு அரசு பள்ளியில் ஆசிரியர்களு மது அருந்தி வருவதாகவும் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாகவும் தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியிருக்கிறார். இது தொடர்பாக அ... மேலும் பார்க்க