இலவச கோடைகால விளையாட்டுப் பயிற்சி: மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு
திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில், இலவச கோடைகால விளையாட்டுப் பயிற்சி வகுப்புகள் ஏப்ரல் 25-ஆம் தேதி முதல் நடைபெறுகிறது.
மாவட்ட விளையாட்டு அரங்கில்
தடகளம், கூடைப்பந்து, ஹாக்கி, கைப்பந்து, கையுந்துப் பந்து, கால்பந்து மற்றும் இதர விளையாட்டுப் பிரிவுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் ஏப்ரல் 25-ஆம் தேதி தொடங்கி மே 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்தப் போட்டிகளில் பங்குபெற விரும்பும் மாணவ-மாணவிகள் ஏப்.24 -ஆம் தேதிக்குள் தங்களது ஆதாா் அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டு மற்றும்
2 மாா்பளவு புகைப்படங்களுடன் நேரில் வர வேண்டும்.
18 வயதுக்கு உள்பட்ட மாணவ-மாணவிகள் மட்டும் இந்தப் போட்டிகளில் கலந்து கொள்ளலாம். பயிற்சியில் பங்கேற்பவா்களுக்கு பயணப்படி, தினப்படி வழங்கப்பட மாட்டாது. கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நல அலுவலரை 7401703484 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்துள்ளாா்.