செய்திகள் :

இளநரை முதல் முடி உதிர்வு வரை; கூந்தலைக் காக்கும் கீரை தைலம்!

post image

''கூந்தல் உதிர்வதற்கு பல காரணங்கள் உண்டு. அதைத் தடுக்கவும் பல வழிகள் உண்டு. தலைமுடியானது திடீரென ஏதோ ஒரு காரணத்தால் கருமை குறைந்து போகக்கூடும். இளநரைகூட எட்டிப் பார்க்கலாம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் உங்களுக்குக் கைகொடுப்பவை கூந்தல் தைலங்கள்.

இது முடியின் வளர்ச்சியைத் தூண்டுவதோடு, கருகருவெனவும் பராமரித்து, உங்கள் இளமையைத் துள்ள வைக்கும்'' என்கிற அழகுக்கலை நிபுணர் ராஜம் முரளி, வெட்டிவேர் தைலம் மற்றும் கீரை தைலம் தயாரிக்கும் முறையையும், அவற்றின் பலன்களையும் இங்கே விவரிக்கிறார்.

கூந்தல் தைலங்கள்
கூந்தல் தைலங்கள்

''வெட்டிவேர் (சிறுசிறு துண்டுகளாக) - 1 கப், ஜாதிக்காய் - 10... இவை இரண்டையும் முந்தைய நாள் இரவே காய்ச்சிய பசும்பாலில் ஊற வைத்துவிடுங்கள்.

மறுநாள் விழுதாக அரைத்து, இரண்டு கப் தேங்காய் எண்ணெயில் போட்டு, சட சடவென ஓசை வரும்வரை காய்ச்சி இறக்கினால் வெட்டிவேர் தைலம் தயார்.

பிறகு, அரை மூடி தேங்காயைத் துருவி, அரைத்து அடுப்பில் வைத்து எண்ணெய் பிரியும் வரை காய்ச்சி வடிகட்டி, இதை வெட்டிவேர் தைலத்துடன் சேருங்கள்.

இந்தத் தைலத்தை தினமும் தலைக்குத் தேய்த்துக் கொள்ளலாம். தலையில் வியர்வையின் காரணமாக சுரக்கும் அதீத எண்ணெய் உறிஞ்சப்படுவதற்கு வெட்டிவேர் துணை புரியும்.

முடி வளர்ச்சியை ஜாதிக்காய் பார்த்துக் கொள்ளும். முடியை சீக்கிரமாக வளர வைக்கும் வேலையை பசும்பால் எடுத்துக் கொள்ளும். கருகருவென கூந்தலின் நிறத்தைப் பராமரிப்பது... தேங்காயின் வேலை.

கூந்தல் தைலங்கள்
கூந்தல் தைலங்கள்

கூந்தல் என்று இருந்தால் உதிராமல் இருப்பது என்பது அபூர்வம். கூந்தல் உதிர்வதற்கு பல காரணங்கள் உண்டு. அதேசமயம், அதைத் தடுத்து நிறுத்தவும் பல வழிகள் உண்டு என்பதுதான் சந்தோஷமான விஷயம். அதில் ஒன்று, கீரை தைலம்!

அரைக்கீரை, பொன்னாங்கன்னி கீரை, கறிவேப்பிலை, கற்பூரவல்லி, வெந்தயக்கீரை இந்த ஐந்து இலைகளையும் தலா ஒரு கப் எடுத்து, அரைத்துக் கொள்ளவும்.

இந்த விழுதை ஒரு கப் தேங்காய் எண்ணெயில் போட்டு பச்சை நிறம் மாறாமல் காய்ச்சி இறக்கிவிடுங்கள். இதை ஒரு பாட்டிலில் சேமித்து ஒரு நாள் வைத்திருந்தால்... தெளிந்துவிடும். தெளிந்த எண்ணெயை தனியாகப் பிரித்து சேமியுங்கள். அதை வாரத்தில் இரண்டு நாட்கள் தலையில் தேய்த்து, சீயக்காய் போட்டு அலசினால்... கூந்தல் உதிர்வது நின்றுவிடும். அது எந்தக் காரணத்தினால் உதிர்ந்தாலும் தடுத்து நிறுத்த வேண்டிய வேலையை இந்தக் கீரைத் தைலம் பார்த்துக்கொள்ளும்.

சரியாகச் சாப்பிடாமல் ரத்தசோகையால் முடிகொட்டுகிறது என்றால், அதை அரைக்கீரை நிவர்த்தி செய்துவிடும்.

இந்தத் தைலத்தில் சேர்க்கப்பட்டிருக்கும் கறிவேப்பிலை, இளநரைக்கு தடா போடும்.

உடல் உஷ்ணத்தால் முடி கொட்டிக் கொண்டி ருந்தால் அதை தடுத்து நிறுத்தும் வேலையை பொன்னாங்கன்னி பார்த்துக் கொள்ளும்.

பொடுகு அரிப்பினால் முடி வளர்வது தடைபட்டால், வெந்தயக்கீரை அதை நிவர்த்தி செய்வதோடு, மிருதுவாகவும் மாற்றி வைக்கும்.

உணவுப்பழக்கத்தாலும் முடி உதிர்வதுண்டு. இதன் காரணமாக முடி உதிராமல், கட்டுக்குள் கொண்டு வர கற்பூரவல்லி உதவும்'' என்கிறார் ராஜம் முரளி.

அழகு என்ற சொல்லுக்கு தேங்காய்! | Beauty tips

தேங்காய், எளிதில் கிடைக்கக்கூடிய இயற்கையான அழகூட்டி. முற்றிய தேங்காயைத் துருவி, அதை நன்றாக அரைத்து, வடிகட்டி, காய்ச்சி எடுக்கும்போது எண்ணெய் பிரியும். இந்த சுத்தமான தேங்காய் எண்ணெயை, பிறந்த குழந்தைகளு... மேலும் பார்க்க

கருவளையம் முதல் நிறம் வரை; வாழைப் பழத்தை இப்படியெல்லாம் யூஸ் பண்ணா அழகாகலாம்!

வாழைப்பழம், `விட்டமின் இ' சத்து நிறைந்தது. கருவளையங்கள், தழும்புகள் நீக்கவல்லது என்பதோடு, பாதங்களுக்கும் நலம்புரியும். இந்தப் பழத்தில் கொட்டிக்கிடக்கும் அழகு சார்ந்த நன்மைகளைக் கூறுகிறார், அழகுக்கலை ந... மேலும் பார்க்க

நகம் பெயர்ந்துவிட்டால் நாம் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? - மருத்துவர் விளக்கம்

விரல்களுக்கு அழகுசேர்ப்பது நகம். அது பெயர்ந்தாலோ, அடிபட்டாலோ ஏற்படும் வலி இருக்கிறதே... தாங்க முடியாதது; வார்த்தைகளில் வர்ணிக்க முடியாதது. அதோடு, கை கால்களின் அழகும் பாதிக்கப்பட்டுவிடும். கொஞ்சம் அஜாக... மேலும் பார்க்க