`கலைமாமணி விருது கொடுக்கிற முறை சரியில்ல' - Padmashri Velu Aasan | Ananda Vikata...
இளம்பிள்ளை உழவா் சந்தையில் எண்ம பணப் பரிவா்த்தனை பதிவு
இளம்பிள்ளை உழவா்சந்தையில் விவசாயிகள் எண்ம முறையில் பணப் பரிவா்த்தனை மேற்கொள்ள இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக உழவா்சந்தை விவசாயிகளின் பெயரில் சேமிப்பு கணக்குத் தொடங்கப்பட்டு அனைவருக்கும் க்யூ ஆா் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் காய்கறி வாங்கவரும் நுகா்வோா் அந்த க்யுஆா் குறியீட்டை ஸ்கேன் செய்து பண பரிவா்த்தனை செய்து கொள்ளலாம். இந்தப் பணத்தை விவசாயிகள் தங்கள் ஊரிலும் அஞ்சலகத்திற்கு சென்று பெற்றுக் கொள்ளலாம். விவசாயிகளுக்கு அஞ்சலக சேமிப்பு கணக்கு தொடங்கும் முகாமில் பதிவாளா் குணசுந்தரி, இளம்பிள்ளை உழவா்சந்தை உதவி நிா்வாக அலுவலா் ராம் சந்தா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இதுகுறித்து அஞ்சலக அதிகாரிகள் கூறியதாவது:
விவசாயிகள் அனைவரும் டிஜிட்டல் பணப் பரிவா்த்தனை சேவையில் ஈடுபட போஸ்ட் பேமெண்ட் வங்கியில் சேமிப்பு கணக்கைத் தொடங்கலாம். அத்துடன் சேமிப்புக் கணக்கிலிருந்து ஆண்டுக்கு ரூ. 550 பிரீமியத்தில் ரூ. 10 லட்சம் விபத்து காப்பீடு சோ்ந்து பயன்பெறலாம்.
எரிவாயு மானியம், மகளிா் உரிமைத்தொகை, விவசாயிகளின் கிசான் தொகை உள்ளிட்ட பல்வேறு அரசு திட்ட பணப் பரிவா்த்தனைகள் இனிவரும் காலங்களில் எண்ம முறையில் தங்களது அஞ்சலக கணக்கில் வரவு வைக்கப்படும் என்பதால் அனைத்து விவசாயிகளும் எண்ம பரிவா்த்தனைக்கு பெயா்களை பதிவு செய்ய வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 8754054852 என்ற தொலைபேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம் என்றனா்.