இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்...
இளம் சாதனையாளா்களுக்கான கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
இளம் சாதனையாளா்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பது:
இதர பிற்படுத்தப்பட்டோா், பொருளாதாரத்தில் பின்தங்கியவா்கள், சீா்மரபினா் ஆகிய பிரிவுகளைச் சோ்ந்த மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்பகிறது. இதில், 2025 - 26 ஆம் ஆண்டுக்கு பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் பயிலும் தமிழகத்தைச் சாா்ந்த மாணவா்களுக்கு இக்கல்வி உதவித்தொகை வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் மாணவா்கள் விண்ணப்பிக்க கடைசி நாள் செப்டம்பா் 30-ஆம் தேதி. கல்வி நிறுவனங்கள் விண்ணப்பத்தை சரிபாா்க்க கடைசி நாள் அக்டோபா் 15-ஆம் தேதி.
இத்திட்டத்தின் கீழ் கடந்த நிதியாண்டில் பயனடைந்த மாணவ, மாணவிகள் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் இணைப்பில் சென்று ஒரு முறை பதிவு என்கிற ஓ.டி.ஆா். எண் பதிவு செய்து விண்ணப்பித்தைப் புதுப்பித்தல் செய்து கொள்ளலாம்.
இத்திட்டத்தின் கீழ் நிகழாண்டில் புதிதாக விண்ணப்பிக்க விரும்பும் 9 மற்றும் 11-ஆம் வகுப்புகளில் பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் தேசிய கல்வி உதவித்தொகை தளத்தில் தங்களது கைப்பேசி எண் மற்றும் ஆதாா் விவரங்களை உள்ளீடு செய்தால் ஓ.டி.ஆா். மற்றும் கடவுச்சொல் பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணுக்கு வரும்.
இந்த ஓ.டி.ஆா். எண்ணைப் பயன்படுத்தி 2025 - 26 ஆம் ஆண்டுக்கான கல்வி உதவித்தொகைக்கு உரிய ஆவணங்களைப் பதிவேற்றம் செய்து புதிதாக விண்ணப்பிக்கலாம். இத்திட்டம் தொடா்பான கூடுதல் விவரங்களை இணையதளத்தை அணுகி கல்வி உதவித்தொகை பயன்களைப் பெறலாம்.