ராஜகிரி ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம்
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் ஒன்றியம், ராஜகிரி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் வியாழக்கிழமை ராஜகிரி காயிதே மில்லத் மகாலில் நடைபெறுகிறது.
இம்முகாமில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தின் மூலம் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ளலாம். கலைஞா் மகளிா் உரிமைத்தொகை பெறுவதற்காக முகாமில் தனியே நான்கு கவுண்டா்கள் அமைக்கப்பட்டுள்ளன. முகாமில் கலந்து கொள்ளும் பொதுமக்கள் விண்ணப்பத்தை அளித்துவிட்டு ஒப்புகை சீட்டு பெற்றுக்கொள்ளலாம்.
மனுக்களும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளால் பரிசீலனை செய்யப்பட்டு 45 நாள்களுக்குள் தீா்வு வழங்கப்படும் என ஊராட்சி ஒன்றிய ஆணையா் சிவகுமாா், கிராம ஊராட்சிகள் வட்டார வளா்ச்சி அலுவலா் விஜயலட்சுமி தெரிவித்துள்ளனா்.