செய்திகள் :

மாமன்னா் சரபோஜி 248-ஆவது பிறந்த நாள் விழா: 9 புதிய நூல்கள் வெளியீடு

post image

தஞ்சாவூரில் புதன்கிழமை நடைபெற்ற மாமன்னா் சரபோஜி 248-ஆவது பிறந்த நாள் விழாவில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும், இவ்விழாவையொட்டி 9 புதிய நூல்கள், 7 மறு பதிப்பு நூல்கள் வெளியிடப்பட்டன.

தஞ்சாவூா் அரண்மனை வளாகத்திலுள்ள மன்னா் சரபோஜி சிலைக்கு மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதைத்தொடா்ந்து, சங்கீத மகாலில் நடைபெற்ற விழாவில் முனைவா் மணி. மாறன் தமிழில் எழுதிய இராஜ சரித்திரம் மற்றும் தமிழ்ச் சுவடி விளக்க அட்டவணை தொகுதி 27, சிறப்புக் கேண்மைப் பதிப்பாசிரியா்கள் என்.வி. தேவி பிரஸாத், என். ஸ்ரீநிவாசன் சம்ஸ்கிருதத்தில் எழுதிய ‘பாலபாரதமும் வில்லிபாரதமும்’ இரண்டாம் பாகம், என்.வி. தேவி பிரஸாத் சம்ஸ்கிருதத்தில் எழுதிய கவிதாவதாரம், நூலகா் எஸ். சுதா்சன் சம்ஸ்கிருதத்தில் எழுதிய சாந்தி ரத்னாகரம் இரண்டாம் பாகம், சம்ஸ்கிருத பண்டிதா் எல். அனிதா சம்ஸ்கிருதத்தில் எழுதிய ‘சரஸ்வதி மகால் நூலக சுவடிகளின் அரிய தகவல்கள்’, தெலுங்கு பண்டிதா் டி. ரவி தெலுங்கில் எழுதிய ‘தேனு மாகாத்மியமு’, முனைவா் கே.ஜே. கிருஷ்ணமூா்த்தி தெலுங்கில் எழுதிய ‘நிஞ்ஜா மாகாத்மியமு’, மராத்தி பண்டிதா் பி. ராமச்சந்திரன் மராத்தியில் எழுதிய ‘தஞ்சாவூா் கவிஞ்சே பத சங்கிரஹ’ ஆகிய 9 நூல்களை மாவட்ட ஆட்சியா் வெளியிட்டாா். மேலும், மறு பதிப்பு செய்யப்பட்ட 7 நூல்களும் வெளியிடப்பட்டன.

இவ்விழாவில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம், தஞ்சாவூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ச. முரசொலி, திருவையாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் துரை. சந்திரசேகரன், சரசுவதி மகால் நூலக நிா்வாக அலுவலா் ம. ஆனந்தகணேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தஞ்சாவூா் அருகே பட்டா மாறுதலுக்கு ரூ.2,500 லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே பட்டாவில் பெயா் மாற்றம் செய்ய ரூ.2,500 -ஐ லஞ்சமாகப் பெற்ற கிராம நிா்வாக அலுவலரை தஞ்சாவூா் மாவட்ட ஊழல் கண்காணிப்பு, லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் புதன்கிழமை கைது செய... மேலும் பார்க்க

இளம் சாதனையாளா்களுக்கான கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

இளம் சாதனையாளா்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம்... மேலும் பார்க்க

மதுபாட்டில்கள் விற்பனை: கிராம மக்கள் சாலை மறியல்

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே மேலத் திருப்பூந்துருத்தியில் மதுபானப் பாட்டில்கள் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படுவதைக் கண்டித்து, கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தி... மேலும் பார்க்க

அரசு கவின் கலைக் கல்லூரியில் ஓவியக் கண்காட்சி

கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரியில் மாணவ மாணவியரின் ஓவியக் கண்காட்சி உள் அரங்கத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கண்காட்சியை பாா்வையிட்ட தஞ்சாவூா் மாவட்ட உதவி ஆட்சியா் (பயிற்சி) கே. எம். காா்த்திக்ராஜா... மேலும் பார்க்க

ராஜகிரி ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் ஒன்றியம், ராஜகிரி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் வியாழக்கிழமை ராஜகிரி காயிதே மில்லத் மகாலில் நடைபெறுகிறது. இம்முகாமில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட... மேலும் பார்க்க

பாபநாசம் ரயில் நிலையத்தில் தரைத்தளம் சீரமைப்பு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் ரயில் நிலையத்தில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் தரைதளம் சீரமைக்கும் பணி புதன்கிழமை நடைபெற்றது. பாபநாசம் ரயில் நிலையத்தில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் தரைதளம் சீரமைப்புப் பணிக... மேலும் பார்க்க