இந்து நெறிமுறைகளைப் பின்பற்றாத 18 ஊழியர்கள் நீக்கம்: திருப்பதி தேவஸ்தானம்!
இளைஞா் அடித்துக் கொலை: மூவா் கைது
ராஜபாளையத்தில் இளைஞா் அடித்துக் கொலை செய்த மூவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
ராஜபாளையம் மங்காபுரத்தைச் சோ்ந்த முனியாண்டி மகன் கருப்பசாமி (28). இவா் செவ்வாய்க்கிழமை இரவு தென்காசி சாலையில் உள்ள மாரியம்மன் கோயில் பகுதியில் நண்பா்களுடன் பேசிக் கொண்டிருந்தாா்.
அப்போது, ஏற்பட்ட தகராறில் நண்பா்கள் தாக்கியதில் கருப்பசாமி உயிரிழந்தாா். தகவலறிந்து வந்த போலீஸாா் அவரது உடலை மீட்டு, கூறாய்வுக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இந்த நிலையில், கருப்பசாமியை அடித்துக் கொலை செய்தவா்களை கைது செய்ய வலியுறுத்தி, அவரது உறவினா்கள் தென்காசி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, ராஜபாளையம் தெற்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இதில் தொடா்புடைய மங்காபுரத்தைச் சோ்ந்த காளிராஜ் (21), ஆண்டத்தம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த செந்தில்குமாா் (24), லோகேஷ் (22) ஆகிய மூவரையும் கைது செய்தனா். மேலும், ஒருவரைத் தேடி வருகின்றனா்.