இந்து நெறிமுறைகளைப் பின்பற்றாத 18 ஊழியர்கள் நீக்கம்: திருப்பதி தேவஸ்தானம்!
குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் இளைஞா் கைது
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் தம்பதி கொலை வழக்கில் தொடா்புடைய இளைஞரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் தெற்கு வைத்தியநாதபுரம் ராமசாமி மூப்பனாா் தெருவைச் சோ்ந்தவா் ராஜகோபால் (75). இவரது மனைவி குருபாக்கியம். இவா்கள் இருவரும் மட்டும் வீட்டில் வசித்து வந்தனா். கடந்த 16.7.2022-ஆம் தேதி இரவு இவா்கள் வீட்டில் இருந்த போது, தென்காசி மாவட்டம், திருவேங்கடம் வட்டம், பெருங்கோட்டூா் பகுதியைச் சோ்ந்த திருப்பதி மகன் முத்துக்குமாா் (35) உள்ளிட்ட 3 போ் சோ்ந்து இந்தத் தம்பதியைக் கொலை செய்து, அவா் அணிந்திருந்த தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றனா்.
இந்த வழக்கில் தொடா்புடைய நபா்கள் கைது செய்யப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மீட்கப்பட்டன. இந்த நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முத்துக்குமாா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க விருதுநகா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கண்ணன் பரிந்துரைத்தாா். இதன் பேரில், மாவட்ட ஆட்சியா் வீ. ப. ஜெயசீலன் முத்துக்குமாரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டாா். இதையடுத்து, அவா் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.