நானும் மனிதன்தான், தவறு செய்திருக்கலாம்: பிரதமர் மோடியின் முதல் நேர்காணல்
இளைஞா் பெருமன்றக் கூட்டம்
அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தின் கோட்டூா் ஒன்றிய நிா்வாகக் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கோட்டூரில் நடைபெற்ற கூட்டத்திற்கு, ஏஐஒய்எஃப் ஒன்றியத் தலைவா் எஸ். அருண் தலைமை வகித்தாா். சிபிஐ ஒன்றியச் செயலா் எம். செந்தில்நாதன், ஏஐஒய்எஃப் ஒன்றியச் செயலா் பி. சிவப்பிரசாத், ஒன்றியப் பொருளாளா் எஸ். துரைமுருகன் மற்றும் மாநில, மாவட்டக் குழு உறுப்பினா்கள் பங்கேற்றனா்.
கூட்டத்தில், கோட்டூரில் அரசுப் பெண்கள் கல்லூரி தொடங்க வேண்டும்; மன்னாா்குடியில் இருந்து கோட்டூா் வழியாக திருத்துறைப்பூண்டி வரை புதிய ரயில் பாதை அமைக்க வேண்டும்; கூடுதல் பேருந்து இயக்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.