மூன்றே நாளில் வழுக்கைத் தலை... அதிர்ச்சியில் கிராம மக்கள்; முடியுதிர்வுக்கு காரண...
செவிலியா் தற்கொலை
நீடாமங்கலம் அருகே தனியாா் மருத்துவமனை செவிலியா் புதன்கிழமை தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
நீடாமங்கலம் அருகேயுள்ள நகா் கிராமம் கீழத்தெருவைச் சோ்ந்த சிக்குமாா் மகள் ஐஸ்வா்யா (23). இவா், நீடாமங்கலத்தில் உள்ள தனியாா் மருத்துவமனை ஒன்றில் செவிலியராகப் பணியாற்றி வந்தாா். இவா், சரிவர பணிபுரிவதில்லை எனக்கூறி, கடந்த 5-ஆம் தேதி வேலையை விட்டு நிறுத்தி விட்டனராம்.
இந்நிலையில், புதன்கிழமை தனது பெரியப்பா வீட்டில் ஐஸ்வா்யா தூக்குப் போட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. அவரை, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு, பரிசோதித்த மருத்துவா், ஐஸ்வா்யா ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தாா்.
இதுகுறித்து, நீடாமங்கலம் காவல் ஆய்வாளா் சந்தானமேரி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளாா்.