செய்திகள் :

இழிவாகப் பேசியதாக சமூக ஆர்வலர் மீது நடிகை ஹனி ரோஸ் வழக்குப்பதிவு!

post image

நடிகை ஹனி ரோஸ் குறித்து இழிவான கருத்துகளை சமூக ஆர்வலர் ராகுல் ஈஸ்வர் கூறியதாக, அவர் மீது ஹனி ரோஸ் வழக்குப்பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து, சமூக ஆர்வலர் ராகுல் ஈஸ்வர் மீது எர்ணாகுளம் மத்திய காவல் நிலையத்தில் புகார் அளித்த ஹனி ரோஸ் கூறியதாவது, ``என்னையும் என் தொழிலையும் குறிவைத்து மோசமான, இரட்டை அர்த்தமுடைய அவமானகரமான கருத்துகள் உள்பட சமூக ஊடகங்கள் மூலம் எதிர்கொள்ளும் தொடர்ச்சியான அச்சுறுத்தல்களுக்கு ராகுல் ஈஸ்வர் முக்கிய காரணம். அவரது செயல்கள் தொடர்ந்து கடுமையான மன வேதனைக்கு என்னை ஆளாக்கியுள்ளன. மேலும் தற்கொலை எண்ணங்களையும் ஏற்படுத்தியுள்ளன.

இவ்வாறான செயல்கள், ஒரு பெண்ணாக எனது கண்ணியத்தைக் களங்கப்படுத்த வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்ட முயற்சிகள். ராகுல் ஈஸ்வர் நேரடியாகவும் சமூக ஊடகங்கள் மூலமாகவும் தீங்கு விளைவித்ததுடன், எனது பெண்மையை அவமதிப்பதாகவும் பலமுறை அச்சுறுத்தியுள்ளார். எனது தொழில்முறை வாய்ப்புகளை குறைமதிப்பிற்கு உள்படுத்தவும் அவர் முயற்சித்துள்ளார்.

நானும் எனது குடும்பத்தினரும் மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறோம். அதற்கு நீங்களும் ராகுல் ஈஸ்வர் ஒரு முக்கிய காரணம். அவரது நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டு, அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

கடந்த வாரத்தில் தொழிலதிபர் போபி செம்மனூர் மீது ஹனி ரோஸ் பாலியல் புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது. ஹனி ரோஸின் புகாரையடுத்து, போபி செம்மனூர் கைது செய்யப்பட்டார்.

இதையும் படிக்க:சொல்லப் போனால்... டிரம்ப்பின் நாடு பிடிக்கும் அதிரடித் திட்டம்!

மணிப்பூரில் 2 மாவட்டங்களில் இருந்து ஆயுதங்கள், வெடிபொருள்கள் மீட்பு

மணிப்பூரில் இரண்டு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது ஆயுதங்கள், வெடிபொருள்களை பாதுகாப்புப் படையினர் மீட்டுள்ளனர். மணிப்பூர் மாநிலம், சுராசந்த்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓல... மேலும் பார்க்க

தில்லி தேர்தல்: வாக்காளர்கள் நன்கொடை அளிக்கும் பிரசாரம் தொடக்கம்

புது தில்லி : தில்லி சட்டப்பேரவை தேர்தல் பிரசாரம்m உள்பட செலவுக்காக ரூ. 40 லட்சம் வரை தனக்கு தேவைப்படுவதாக தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவருமான அதிஷி பேசியுள்ளார். தில்லி ... மேலும் பார்க்க

அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா: பிரதமர் மோடி பங்கேற்க மாட்டார்!

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வரும் 20-ஆம் தேதி பதவியேற்கவிருக்கிறார்.உலக வல்லரசின் 47-ஆவது அதிபராகவும், அந்நாட்டின் தலைமைப் பதவிக்கு இரண்டாவது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டி... மேலும் பார்க்க

பாஜக ஆட்சி வந்தால் குடிசைப்பகுதிகளை அழித்து விடுவர்: கேஜரிவால்

தில்லியில் பாஜக ஆட்சி வந்தால், குடிசைப்பகுதி மக்களின் நிலங்களைக் கையகப்படுத்தி விடுவர் என்று ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் கூறினார்.தில்லியில் ஷாகுர் பஸ்தி பகுதியில் செய்தியா... மேலும் பார்க்க

வேலை செய்யும் நேரத்தைவிட பணியின் தரமே முக்கியம்! -ஆனந்த் மஹிந்திரா

தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா பணியாளர் நலன் சார்ந்த கருத்துகளை சமீபத்திய பேட்டியொன்றில் தெரிவித்திருப்பதை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.கடந்த சில நாள்களுக்கு முன், இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் என். ஆர்.... மேலும் பார்க்க

விவேகானந்தரின் கனவை நிறைவேற்ற உறுதிபூண்டுள்ளோம்: பிரதமர் மோடி

சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், சுவாமி விவேகானந்தர் ஜெயந்தியை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்துகிற... மேலும் பார்க்க