இஸ்ரேல்: யேமன் தாக்குதலில் 20 போ் காயம்
யேமனில் இருந்து ஏவப்பட்ட ட்ரோன் ஒன்று இஸ்ரேலின் தெற்கு சுற்றுலா நகரமான எய்லாட்டை புதன்கிழமை தாக்கியதில் 22 போ் காயமடைந்தனா்.
இது குறித்து இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
செங்கடலையொட்டி அமைந்துள்ள உள்ள எய்லாட் நகரில், யேமனில் இருந்து ஏவப்பட்ட ட்ரோன் விழுந்தது. வான்பாதுகாப்பு அமைப்பு இதைத் தடுக்கத் தவறியது. கடந்த சில நாள்களில் இது போன்ற தாக்குதல் நடந்துள்ளது இது இரண்டாவது முறை.
இந்த தாக்குதலில் காயமடைந்த 22 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவா்களில் 26 மற்றும் 60 வயது நபா்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகரின் மையப் பகுதியில், சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் இடத்தில் அந்த டிரோன் விழுந்ததால் அதிக சேதம் ஏற்பட்டதாக போலீஸாா் கூறினா்.
யேமனில் இருந்து ட்ரோன் ஏவப்பட்டதாகக் கூறப்பட்டாலும், அந்த நாட்டின் கணிசமான பகுதியில் ஆட்சி செலுத்திவரும் ஹூதி கிளா்ச்சியாளா்கள் இதற்கு இதுவரை பொறுப்பேற்கவில்லை.