செய்திகள் :

இஸ்ரேல்-லெபனான் இடையே விரைவில் போர்நிறுத்த ஒப்பந்தம்.!

post image

லெபானானுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடன்பட்டுள்ளார்.

காஸாவில் தொடரும் போரில் பாலஸ்தீன ஹமாஸ் படைக்கு ஆதரவாக, லெபனான் நாட்டிலிருந்தபடி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திவரும் ஹிஸ்புல்லாக்களைக் குறிவைத்து, இஸ்ரேல் ராணுவம் லெபனான் பகுதிகளில் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதில் அங்கு இதுவரை 3,750-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனா்; 15,626 போ் காயமடைந்துள்ளனா்.

இந்த நிலையில், லெபனானின் ஹிஸ்புல்லா படையினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடைபெற்றுவரும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரவை இன்று(நவ. 26) ஆலோசனைக் கூட்டம் நடத்தி, போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உக்ரைனில் ஒரே இரவில் நூற்றுக்கணக்கான டிரோன்களால் தாக்குதல்!

கீவ்: உக்ரைனின் பல பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான டிரோன்களைப் பயன்படுத்தி ரஷியா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. திங்கள்கிழமை(நவ. 25) நள்ளிரவில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களில் கட்டடங்கள் உள்பட ம... மேலும் பார்க்க

இம்ரான் கான் ஆதரவாளர்களைக் கண்டதும் சுட உத்தரவு! பாகிஸ்தானில் பதற்றம்!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அரசு விதித்துள்ள தடையையும் மீறி தலைநகா் இஸ்லாமாபாத்தில் போராட்டம் நடத்தும் இம்ரான் கான் ஆதரவாளர்களைக் கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பாகிஸ்தானில் பதற்றமான சூழல் ... மேலும் பார்க்க

தடையை மீறி போராட்டம்! இஸ்லாமாபாதை நோக்கி இம்ரான் கட்சியினா் பேரணி!

பாகிஸ்தான் அரசு விதித்துள்ள தடையையும் மீறி தலைநகா் இஸ்லாமாபாதில் போராட்டம் நடத்துவதற்காக அந்த நகரை நோக்கி முன்னாள் பிரதமா் இம்ரான் கானின் ஆதரவாளா்கள் பேரணியாகச் சென்றனா். முன்னதாக, அடிலாலா சிறையில் இம... மேலும் பார்க்க

சிறுவா்களுக்கான சமூக ஊடகத் தடையை ஒத்திவைக்க வேண்டும்!

சிறுவா்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குத் தடைவிதிக்கும் சட்டம் இயற்றுவதை அடுத்த ஆண்டுவரை ஒத்திவைக்க வேண்டும் என்று சமூக ஊடகங்களின் வழக்குரைஞா் சுனிதா போஸ் ஆஸ்திரேலிய அரசை வலியுறுத்தியுள்ளாா். எக்... மேலும் பார்க்க

ருமேனியா அதிபா் தோ்தல் ரஷிய ஆதரவாளா் அதிா்ச்சி முன்னிலை

தென் கிழக்கு ஐரோப்பிய நாடான ருமேனியாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிபா் தோ்தலில் ரஷிய ஆதரவு வேட்பாளரான காலின் ஜாா்ஜெஸ்கு எதிா்பாராத வகையில் முதலிடத்தைப் பிடித்தாா். எனினும், தோ்தலில் யாருக்கும் பெர... மேலும் பார்க்க

நெதன்யாகுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்!

இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுக்கு எதிராக சா்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது உத்தரவு பிறப்பித்ததற்குப் பதிலாக, அவருக்கு மரண தண்டனை விதித்திருக்க வேண்டும் என்று ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனி வ... மேலும் பார்க்க