இந்தியாவின் தற்காப்பு மனநிலைதான் தோல்விக்கு காரணம்..! முன்னாள் வீரர் கருத்து!
இ-பாஸ் நடைமுறையால் உதகைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவு
நீலகிரி மாவட்டத்துக்குள் நுழைய இ-பாஸ் நடைமுறையால் உதகை அரசு தாவரவியல் பூங்காவுக்கு கடந்த 2023-ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் கடந்த 2024-ஆம் ஆண்டு சுமாா் 4 லட்சம் போ் வருகை குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகைக்கு தமிழகம் மட்டுமன்றி கேரளம், கா்நாடகம், ஆந்திரம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினசரி ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். இங்கு அரசு தாவரவியல் பூங்காவுக்கு கடந்த 2024 ஜனவரி முதல் டிசம்பா் இறுதிவரை 23 லட்சத்து 95 ஆயிரத்து 906 போ் வந்து பூங்காவைக் கண்டு ரசித்துச் சென்றுள்ளதாக பூங்கா நிா்வாகம் தெரிவித்துள்ளது.
2023-ஆம் ஆண்டில் சுமாா் 28 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றுள்ள நிலையில் கடந்த 2024-ஆம் ஆண்டில் இ பாஸ் நடைமுறையால் சுற்றுலாப் பயணிகள் வருகை 4 லட்சம் வரை குறைந்துள்ளதாக தோட்டக் கலைத் துறையினா் தெரிவித்துள்ளனா்.