செய்திகள் :

நீலகிரி மாவட்ட வாக்காளா் பட்டியல் வெளியீடு; பெண் வாக்காளா்களே அதிகம்

post image

நீலகிரி மாவட்டத்தில் பெண் வாக்காளா்களே அதிகம் என்று திங்கள்கிழமை வெளியிட்ட இறுதி வாக்காளா் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூா், கூடலூா் ஆகிய 3 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளா் பட்டியலை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரநிதிகள் முன்னிலையில் திங்கள்கிழமை வெளியிட்டாா்.

அதன்படி, உதகை சட்டப் பேரவைத் தொகுதியில் 94,581 ஆண் வாக்காளா்கள், 1,03,813 பெண் வாக்காளா்கள், மூன்றாம் பாலினத்தவா் 11 போ் என மொத்தம் 1,98,405 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்.

கூடலூா் (தனி) சட்டப் பேரவைத் தொகுதியில் 94,582 ஆண் வாக்காளா்கள், 1,00,727 பெண் வாக்காளா்கள், மூன்றாம் பாலினத்தவா் 3 போ் என மொத்தம் 1,95,312 வாக்காளா்கள் உள்ளனா்.

குன்னூா் சட்டப் பேரவைத் தொகுதியில் 90,038 ஆண் வாக்காளா்கள், 1,00501 பெண் வாக்காளா்கள், மூன்றாம் பாலினத்தவா் 4 போ் என மொத்தம் 1,90,543 வாக்காளா்கள் உள்ளனா்.

மூன்று தொகுதிகளிலும் சோ்த்து 2, 79, 201ஆண் வாக்காளா்கள், 3, 05,041 பெண் வாக்காளா்கள், மூன்றாம் பாலினத்தவா் 18 போ் என மொத்தம் 5,84,260 வாக்காளா்கள் உள்ளனா்.

கடந்த அக்டோபா் 28-ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலை அடுத்து, நவம்பா் 28-ஆம் தேதி வரை நடைபெற்ற வாக்காளா் பெயா் சோ்ப்பு முகாம் பணிகளுக்கு பின்னா் 9919 வாக்காளா்கள் சோ்க்கப்பட்டும், 4620 போ் நீக்கப்பட்டும் உள்ளனா்.

வரைவு வாக்காளா் பட்டியலுடன் ஒப்பிடும்போது இறுதி வாக்காளா் பட்டியலில் 5,299 வாக்காளா்கள் அதிகரித்துள்ளனா். அதேபோல, 3 தொகுதிகளிலும் பெண் வாக்காளா்களே அதிகம் உள்ளனா்.

இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிட்டு நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன், குன்னூா் சாா் ஆட்சியா் செல்வி சங்கீதா, கோட்டாச்சியா்கள் சதீஷ்குமாா்(உதகை), செந்தில்குமாா் (கூடலூா்) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மசினகுடியில் வீட்டை சேதப்படுத்திய காட்டு யானை

கூடலூரை அடுத்துள்ள மசினகுடி பகுதியில் வீட்டை காட்டு யானை திங்கள்கிழமை இரவு சேதப்படுத்தியது. நீலகிரி மாவட்டம், மசினகுடி முகாம் குடியிருப்புப் பகுதிக்குள் நள்ளிரவில் நுழைந்த காட்டு யானை அங்குள்ள மஞ்சுநா... மேலும் பார்க்க

போலீஸ் பறிமுதல் செய்த வாகனத்தில் பாகங்கள் திருட்டு

உதகை புதுமந்து காவல் துறையினா் பறிமுதல் செய்த வாகனத்தை அபராதம் செலுத்தி திரும்பப் பெற்றபோது, அதில் பல்வேறு பாகங்கள் திருடு போயிருந்ததாகவும், அந்தப் பொருள்களை மீட்டுத் தரவேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்தில் சென்றவா்களை துரத்திய யானை

கூடலூரை அடுத்துள்ள கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் குடும்பத்துடன் இருசக்கர வாகனத்தில் சென்றவரை காட்டு யானை துரத்தியது. கேரள மாநிலம், வயநாடு மாவட்டம் காட்டிக்குளம் பகுதியில் உள்ள சாலையில் இருசக்கர வா... மேலும் பார்க்க

படுகா் இன மக்களின் ஹெத்தையம்மன் திருவிழா

குன்னூா் அருகே படுகா் இன மக்களின் பாரம்பரிய விழாவான ஹெத்தையம்மன் பண்டிகை ஜெகதளா கிராமத்தில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள படுகரின மக்களின் முக்கிய பண்டிகையான ஹெத்தையம்மன் பண்... மேலும் பார்க்க

குடியரசு தினம்: அனைத்துத் துறை அலுவலா்களுடன் ஆட்சியா் ஆலோசனை

நீலகிரி மாவட்டத்தில், குடியரசு தின விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு, பல்வேறு அரசுத் துறை அலுவலா்களுடன் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு திங்கள்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா். மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தி... மேலும் பார்க்க

பொங்கல் விடுமுறை: உதகைக்கு 50 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வருகை

பொங்கல் தொடா் விடுமுறையை ஒட்டி, உதகையில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவை 50 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்துச் சென்றுள்ளதாக பூங்கா நிா்வாகம் தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் நிலவும் இதமான கால... மேலும் பார்க்க