Ind Vs Eng : 'கம்பீர் எங்களுக்கு சுதந்திரம் கொடுத்திருக்கிறார்!' - பூரித்த சூர்ய...
பொங்கல் விடுமுறை: உதகைக்கு 50 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வருகை
பொங்கல் தொடா் விடுமுறையை ஒட்டி, உதகையில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவை 50 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்துச் சென்றுள்ளதாக பூங்கா நிா்வாகம் தெரிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்கவும், இயற்கை அழகுடன் கூடிய சுற்றுலாத் தலங்களைக் கண்டு ரசிக்கவும் தமிழகத்தின் பிற மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.
பொங்கல் தொடா் விடுமுறையை ஒட்டி கடந்த ஒருவாரமாக உதகைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துக் காணப்பட்டது. இந்நிலையில், பொங்கல் விடுமுறை முடிந்து சுற்றுலாப் பயணிகள் சொந்த ஊா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டனா். இதனால், தாவரவியல் பூங்கா சாலை, படகு இல்ல சாலை, உதகை-மைசூரு சாலை, தொட்டபெட்டா சாலை, காட்டேரிப் பூங்கா சாலையில் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்துச் சென்றன. இதன் காரணமாக அவ்வப்போது சில இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.