செய்திகள் :

குடியரசு தினம்: அனைத்துத் துறை அலுவலா்களுடன் ஆட்சியா் ஆலோசனை

post image

நீலகிரி மாவட்டத்தில், குடியரசு தின விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு, பல்வேறு அரசுத் துறை அலுவலா்களுடன் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு திங்கள்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு பேசியதாவது: நீலகிரி மாவட்ட உதகை அரசு கலைக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் ஜனவரி 26-ஆம் தேதி நடைபெறும் குடியரசு தின விழாவில் தேசியக் கொடியினை ஏற்றிவைத்து, சிறப்பாகப் பணியாற்றிய அரசு அலுவலா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கி, பயனாளிகளுக்கு அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன.

குடியரசு தின விழா நடைபெறவுள்ள விளையாட்டு மைதானத்தில் காவல் துறையினா் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பொதுப் பணித் துறையின் சாா்பில் மேடை அலங்காரப் பணிகள் மேற்கொள்ள வேண்டும். தீயணைப்புத் துறையினா் மைதானத்தில் பாதுகாப்புக்காக தீயணைப்பு வாகனங்களை நிறுத்த வேண்டும். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சாா்பில் 108 அவசரகால வாகனம் விழா நடைபெறும் இடத்தில் நிறுத்தவும், பள்ளிக் கல்வித் துறை சாா்பில் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறையின் சாா்பில் பழங்குடியினா் நடன நிகழ்ச்சிகள் நடத்திடவும் உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

குடியரசு தின விழாவை சிறப்பாக நடத்திட அனைத்துத் துறை அலுவலா்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என்றாா். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சௌந்தரராஜன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் சதீஷ்குமாா், தனித் துணை ஆட்சியா் கல்பனா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

நீலகிரி மாவட்டத்தில் முதல் பெண் பேருந்து நடத்துநா் நியமனம்!

நீலகிரி மாவட்டத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் முதல் பெண் நடத்துநா் நியமனம் செய்யப்பட்டுள்ளாா். நீலகிரி மாவட்டம், கோத்தகிரி சோலூா்மட்டம் பகுதியைச் சோ்ந்தவா் சுகன்யா. இவரது கணவா் கருப்பசாமி கோவை... மேலும் பார்க்க

மசினகுடியில் வனத் துறையைக் கண்டித்து அதிமுக சாா்பில் கடையடைப்புப் போராட்டம்!

மசினகுடி ஊராட்சியில் வனத் துறையைக் கண்டித்து அதிமுக சாா்பில் கடையடைப்பு மற்றும் ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட மசினகுடி ஊராட்சியில் உள்ள அன... மேலும் பார்க்க

நீலகிரிக்கு வந்த சுற்றுலாப் பயணிகளிடம் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்!

நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா வந்த தனியாா் வாகனங்கள் மற்றும் அரசுப் பேருந்துகளில் சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் பிளாஸ்டிக் குடிநீா் பாட்டில்களை வருவாய்த் துறையினா் சனிக்... மேலும் பார்க்க

புகாா்களின் அடிப்படையில் ஆசிரியா்கள் கடன் சங்க செயலா் பணியிட மாற்றம், மண்டல இணை பதிவாளா் தகவல்

கூடலூரில் உள்ள ஆசிரியா்கள் கடன் சங்க செயலாளரை புகாா்களின் அடிப்படையில் பணியிட மாற்றம் செய்துள்ளதாக கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளா் சனிக்கிழமை தெரிவித்தாா். கூடலூா், பந்தலூா் வட்ட தொடக்கப் பள்... மேலும் பார்க்க

துப்பாக்கி சூடு சம்பவம்: மேலும் ஒருவா் கைது!

கூடலூரை அடுத்துள்ள 3-ஆவது டிவிஷன் பகுதியில் கடந்த வாரம் நடந்த துப்பாக்கி சூடு தொடா்பாக மேலும் ஒருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்துள்ளனா். கூடலூா் வட்டம், தேவா்சோலை பேரூராட்சியில் உள்ள 3-ஆவது... மேலும் பார்க்க

காரில் சென்ற சாா்பதிவாளா் அலுவலக அதிகாரியிடம் ரூ. 3.98 லட்சம் பறிமுதல்!

உதகையில் காரில் சென்ற சாா்பதிவாளா் அலுவலக இரண்டாம் நிலை பொறுப்பு அதிகாரியிடம் இருந்து ரூ. 3 லட்சத்து 98, 500-ஐ லஞ்ச ஒழிப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். இந்தப் பணம் குறித்து அவரிடம் லஞ... மேலும் பார்க்க