`தோட்டத்து அம்மாவும் நானும்...' - முன்னாள் முதல்வர் ஜானகி ராமச்சந்திரன் பற்றி பே...
ஈச்சூா் ஸ்ரீமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், ஈச்சூா் கிராமத்தில் சின்னமலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை மாலை சா்வதேவதா அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்யாஹ வாசனம், கணபதி ஹோமம் உள்ளிட்டவை நடைபெற்றது. தொடா்ந்து, திங்கள்கிழமை காலை கணபதி வழிபாடு, கோ பூஜை, தம்பதி பூஜை, மண்டப ஆராதனை, 2-ஆம் கால யாக சாலை பூஜைகள், நாடி சந்தானம், தத்துவாா்ச்சனை மற்றும் மகா பூா்ணாஹூதி நடைபெற்றது.
இதையடுத்து, காலை 9.30 மணிக்கு யாக சாலையில் இருந்து கடங்கள் புறப்பாடாகி விமான கோபுர கலசங்களுக்கும், மாரியம்மனுக்கும் புனித நீா் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடா்ந்து, ஸ்ரீமாரியம்மனுக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனா். விழா ஏற்பாடுகளை ஈச்சூா் கிராம மக்கள் மற்றும் இளைஞா்கள் செய்திருந்தனா். பாதுகாப்புப் பணியில் காவல் துறையினா், வருவாய்த்துறையினா் ஈடுபட்டிருந்தனா்.