Hormone: பெண்களின் தோழி இந்த ஹார்மோன்... எல்லா மாற்றங்களுக்கும் இதுதான் காரணம்.....
ஈபிள் டவரில் தீ விபத்து!
பாரீஸில் உள்ள ஈபிள் டவரில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஈபிள் டவர் என்ற கோபுரம் உள்ளது. இங்கு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தைய நாளான நேற்று சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் குவிந்திருந்தனர்.
அப்போது, ஈபிள் டவரின் முதல் தளத்துக்கும் இரண்டாம் தளத்துக்கும் இடையே, மின்தூக்கியின் கம்பி சூடானதால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதையும் படிக்க : காஸாவில் ஒரு மணிநேரத்துக்கு ஒரு குழந்தை கொலை: ஐ.நா.
உடனடியாக தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் ஈபிள் டவரில் கூடியிருந்த 1,200-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளை வெளியேற்றி தீயை அணைத்தனர்.
தொடர்ந்து, பாதுகாப்பு கருதி ஈபிள் டவருக்குள் சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்கு மத்தியில் ஈபிள் டவரில் தீ விபத்து ஏற்பட்டு, தடை விதிக்கப்பட்டிருப்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து பாரீஸ் சென்ற சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.