செய்திகள் :

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: தேமுதிக புறக்கணிப்பு

post image

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை தேமுதிக புறக்ணிக்கப் போவதாக கட்சியின் பொதுச்செயலர் பிரேமலதா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், இதுவரை தமிழக தேர்தலில் நடக்காத ஒரு தேர்தலாக, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஆடுகளை மந்தையில் அடைத்து வைத்தது போல் மக்களை அடைத்து வைத்து, ஜனநாயக விரோத தேர்தலை திமுக நடத்தி வெற்றி பெற்றதாக அறிவித்தனர்.

அதே பாணி இடைத்தேர்தல் தான் மீண்டும் நடக்க போகிறது. எனவே ஜனநாயகத்திற்கு விரோதமாக நடக்கும் இந்த தேர்தலில் நம்பிக்கை இல்லாத காரணத்தால், இந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை தேமுதிக புறக்கணிக்கிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: அதிமுக புறக்கணிப்பு - இபிஎஸ்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை அதிமுக ஏற்கெனவே புறக்கணிப்பதாக அறிவித்துள்ள நிலையில் தற்போது அதன் கூட்டணி கட்சியான தேமுதிகவும் புறக்கணிக்கிறது.

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு பிப்ரவரி 5-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மதுரை - தூத்துக்குடி ரயில்வே திட்டத்தை கைவிடுமாறு ஒரு போதும் கூறவில்லை: அமைச்சர் சிவசங்கர்

மதுரை – தூத்துக்குடி ரயில் திட்டத்தை கைவிட தமிழ்நாடு அரசு ஒருபோதும் கூறவில்லை என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஒன்றிய இரயில்வே அமைச... மேலும் பார்க்க

பொங்கல் முடிந்ததும் பரந்தூர் செல்கிறார் விஜய்

ஜனவரி 3ஆவது வாரத்தில் பரந்தூர் மக்களை சந்திக்க தவெக தலைவர் விஜய் செல்லவுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சிகள்... மேலும் பார்க்க

வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்: உறுதியளித்த முதல்வர் ஸ்டாலின்!

சென்னை கொளத்தூரில் சமத்துவப் பொங்கல் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார்.முதல்வர் மு.க. ஸ்டாலின் தொகுதியான சென்னை கொளத்தூரில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்ட... மேலும் பார்க்க

சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா கலைநிகழ்ச்சிகள்: ஜன.13-ல் முதல்வர் தொடங்கி வைக்கிறார்

பொங்கல் விழாவையொட்டி ‘சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சிகளை ஜன.13ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சென்னையில், தை மாதம... மேலும் பார்க்க

பொங்கல் பண்டிகையால் ராக்கெட்டில் பறந்த விமான டிக்கெட்!

தமிழர்களின் பண்டிகையான பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை என்பதால், ரயில்கள் மற்றும் பேருந்துகளில் கட்டுக்கடங்காத கூட்டம் சொந்த ஊர்களுக்கு பயணிக்கும் நிலையில், விமான டிக்கெட் விலையும் கடுமையாக உயர... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றி பெறும்: வி.சி. சந்திரகுமார்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றி பெறும் என்று திமுக வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரு... மேலும் பார்க்க