ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்- பாஜக ஆலோசனை
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நிலைப்பாடு தொடர்பாக தமிழக பாஜக ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது. தொடர்ந்து பிப்.8 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
இடைத்தேர்தலில் காங்கிரஸுக்கு பதில் திமுக களம்காண்கிறது. திமுக சார்பில், கட்சியின் கொள்கை பரப்பு இணை செயலர் வி.சி. சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக எதிர்க்கட்சியான அதிமுகவும், தேமுதிகவும் அறிவித்துள்ளன.
பூரண மதுவிலக்கை விசிக ஆதரிக்கிறது: திருமா
அதேசமயம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் பாஜக கூட்டணி நிச்சயம் போட்டியிடும் என்று தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நிலைப்பாடு தொடர்பாக தமிழக பாஜக ஞாயிற்றுகிழமை முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஹோட்டலில் அண்ணாமலை தலைமையில் இந்த ஆலோசனை நடைபெற்று வருகிறது. மத்திய இணையமைச்சர் எல்.முருகன், மேலிட இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.