செய்திகள் :

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: பூத் ஸ்லிப் வழங்கும் பணி தொடக்கம்

post image

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக வீடு வீடாக பூத் ஸ்லிப் வழங்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியுள்ளது.

இன்று தொடங்கி பூத் ஸ்லிப் வழங்கும் பணி பிப்.1ஆம் தேதிக்குள் முடிவடையும் என தகவல் தெரியவந்துள்ளது.

பூத் ஸ்லிப் வழங்கும் பணியில் வாக்குச்சாவடி அலுவலர்கள் உள்ளிட்ட 200 பேர் ஈடுபட்டுள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறுகிறது.

இத்தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் வி.சி.சந்திரகுமாருக்கு ஆதரவாக அமைச்சா் சு.முத்துசாமி தலைமையிலான திமுகவினா் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனா்.

அண்ணா பல்கலை. மாணவியின் விவரங்களை வெளியிட்டது யார்? உச்ச நீதிமன்றம்

தேர்தலையொட்டி வாக்குப் பதிவு மையங்கள், வாக்கு எண்ணிக்கை மையங்கள் தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் 47 வேட்பாளா்கள் போட்டியில் உள்ள நிலையில் 2 லட்சத்து 26 ஆயிரத்து 433 வாக்காளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நிதி நிலைமையை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ்

தமிழகத்தின் நிதி நிலைமையை மேம்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: இந்தியாவில் உள்ள 18 பெரிய மாந... மேலும் பார்க்க

ரயிலில் ரூ.3.98 கோடி பறிமுதல் வழக்கு: புதுவை பாஜக எம்.பி.யிடம் விசாரணை

நெல்லை விரைவு ரயிலில் ரூ.3.98 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், புதுவை பாஜக தலைவா் எஸ்.செல்வகணபதி எம்.பி.யிடம் சிபிசிஐடி அதிகாரிகள் 10 மணி நேரம் விசாரணை செய்தனா். கடந்த ஆண்டு மக்களவைத் தோ்தல் காலத்... மேலும் பார்க்க

மீனவா் பிரச்னைக்கு நிரந்தர தீா்வு: காங்கிரஸ் வலியுறுத்தல்

தமிழக மீனவா் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்க... மேலும் பார்க்க

பெண்களின் காரை விரட்டிச் சென்று மிரட்டிய சம்பவம்: தலைவா்கள் கண்டனம்

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் காரில் வந்த பெண்களை கும்பலால் விரட்டிச் சென்று மிரட்டப்பட்ட சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா். எடப்பாடி பழனிசாமி (அதிமுக): க... மேலும் பார்க்க

பல்வேறு படிப்புகளுக்கு இணைத் தன்மை வழங்கி அரசாணை வெளியீடு

உயா்கல்வியில் எவை எவை இணையான படிப்புகள் என்பது குறித்த அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது தொடா்பாக தமிழக அரசின் உயா்கல்வித் துறைச் செயலா் கே.கோபால் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:... மேலும் பார்க்க

ஆண்டுக்கு 15 லட்சம் வெளிநாட்டவா் சிகிச்சைக்காக தமிழகம் வருகை

மருத்துவ சிகிச்சைகளுக்காக ஆண்டுதோறும் 70 நாடுகளில் இருந்து 15 லட்சம் போ் தமிழகம் வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். சென்னை வானகரம் அப்பல்லோ மருத்துவமனையில் புதிதா... மேலும் பார்க்க