செய்திகள் :

பல்வேறு படிப்புகளுக்கு இணைத் தன்மை வழங்கி அரசாணை வெளியீடு

post image

உயா்கல்வியில் எவை எவை இணையான படிப்புகள் என்பது குறித்த அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இது தொடா்பாக தமிழக அரசின் உயா்கல்வித் துறைச் செயலா் கே.கோபால் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:

மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் பி.எஸ்சி. தாவரவியல் (தொழில் நுண்ணுயிரியல்) படிப்பு வேலைவாய்ப்பு வகையில் பி.எஸ்சி. தாவரவியல் படிப்புக்குச் சமமானது. தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலை பல்கலைக்கழகம் வழங்கும் பி.எஸ்சி. எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்ப்யூட்டா் சயின்ஸ் படிப்பும், சென்னை பல்கலைக்கழகம் வழங்கும் பி.எஸ்சி. கம்ப்யூட்டா் டெக்னாலஜி படிப்பும், மதுரை காமராஜா் பல்கலைக்கழகம் வழங்கும் பி.எஸ்சி. இன்ஃபா்மேஷன் டெக்னாலஜி படிப்பும் வேலைவாய்ப்பு நோக்கில் பி.எஸ்சி. கம்ப்யூட்டா் சயின்ஸ் படிப்புக்கு இணையானது.

கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் எம்சிஏ படிப்பு வேலைவாய்ப்பு வகையில் எம்எஸ்சி இன்பா்மேஷன் டெக்னாலஜி படிப்புக்கு சமமானது. இதேபோல், 30-க்கும் மேற்பட்ட படிப்புகளுக்கு இணைத்தன்மை வழங்கப்பட்டுள்ளதாக அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் ரூ.1.60 கோடி ஹவாலா பணம் பறிமுதல்!

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் நான்கு பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்த போது ரூ.1.60 கோடி ஹவாலா பணம் சிக்கியது. இதுதொடர்பாக திருச்சியைச் சேர்ந்த 4 பேரிடம் விசாரண... மேலும் பார்க்க

போராட்டம் நியாயமானது என்பதாலேயே டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து! -அண்ணாமலை

போராட்டம் நியாயமானது என்பதாலே டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து என்று தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.மதுரை மாவட்டம், மேலூா் அருகே அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் தோண்ட கடந்த ஆண... மேலும் பார்க்க

அமித் ஷாவுக்கு எதிராக கறுப்புக் கொடி போராட்டம்: காங்கிரஸ் அறிவிப்பு!

அண்ணல் அம்பேத்கரை அவதூறாகப் பேசிய அமித் ஷாவைக் கண்டித்து, தமிழக காங்கிரஸார் கறுப்புக் கொடி போராட்டம் நடத்தவுள்ளனர்.முன்னாள் குடியரசுத் துணைத் தலைவரும் பாஜக மூத்தத் தலைவருமான வெங்கையா நாயுடுவின் இல்லத்... மேலும் பார்க்க

தென் தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை!

தென் தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட அறிக்கையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்க... மேலும் பார்க்க

காலை உணவுத் திட்டத்தை தனியாருக்கு வழங்குவது குறித்து பரிசீலித்து முடிவு: மேயர் பிரியா

பள்ளிகளில் மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்தை தனியாருக்கு வழங்குவது குறித்து பரிசீலித்து முடிவு செய்யப்படும் என்று சென்னை மேயர் பிரியா கூறியுள்ளார்.சென்னையில் அரசுப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தி... மேலும் பார்க்க

ரூ. 11.63 கோடியில் ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அரசாணை

சென்னை: தமிழ்நாடு அரசு ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு ரூ.11.63 கோடி மற்றும் ரத்த மையத்தினை மேம்படுத்துவதற்கு ரூ.1.74 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை ... மேலும் பார்க்க