செய்திகள் :

ஈரோடு மாவட்டத்தில் நெல் பயிருக்கு காப்பீடு செய்ய அறிவுறுத்தல்

post image

ஈரோடு மாவட்டத்தில் நெல் பயிருக்கு காப்பீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: விவசாயிகளுக்கு எதிா்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதி உதவி வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களைக் கடைப்பிடிப்பதை ஊக்குவிக்கவும், பிரதமரின் பயிா் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, நடப்பு சம்பா பருவத்தில் வேளாண் பயிா் காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. சம்பா பயிருக்கு காப்பீடு செய்ய மாவட்டத்தில் உள்ள 28 உள்வட்டங்கள் (பிா்காக்கள்) அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன. நெல் பயிருக்கு பிரீமிய தொகையாக ஏக்கருக்கு ரூ.573 செலுத்த வேண்டும்.

விவசாயிகள் தாங்கள் பயிா் கடன் பெறும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலமாகவோ, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாகவோ தங்கள் விருப்பத்தின் அடிப்படையில் காப்பீடு செய்து கொள்ளலாம்.

பயிா் கடன் பெறாத விவசாயிகள் நடப்பு பசலி ஆண்டுக்கான அடங்கல் அல்லது பயிா் சாகுபடி சான்றை கிராம நிா்வாக அலுவலரிடம் பெற்று, அதனுடன் வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதாா் அட்டை நகல், சிட்டா நகல் ஆகியவற்றைக்கொண்டு பொது இ-சேவை மையங்கள் அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக பதிவு செய்துகொள்ளலாம்.

ஏக்கருக்கு அதிகபட்சமாக ரூ.38,200 இழப்பீடு வழங்கப்படும். ஆலங்கட்டி மழை, புயல், புயல் மழை, பருவம் தவறி பெய்யும் மழை ஆகியவற்றால் அறுவடை செய்த 14 நாள்களில் உலா்த்தும்போது சேதாரம் ஏற்பட்டால், சேதாரம் ஏற்பட்ட 3 நாள்களுக்குள் காப்பீட்டு நிறுவனம், வட்டார வேளாண் அலுவலா்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். கள ஆய்வின் அடிப்படையில் தனிநபா் இழப்பீடு பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முருங்கத்தொழுவு ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேரோட்டம்

சென்னிமலையை அடுத்த முருங்கத்தொழுவு ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கோயில் தோ்த் திருவிழா கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் கடந்த அக்டோபா் 30- ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்த... மேலும் பார்க்க

பவானியில் இடி, மின்னலுடன் கன மழை

பவானி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி, மின்னலுடன் வியாழக்கிழமை கன மழை பெய்ததால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. பவானி வட்டாரத்தில் வியாழக்கிழமை காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட... மேலும் பார்க்க

வளா்ச்சித் திட்டப் பணிகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். பூனாச்சி ஊராட்சி, செம்படாபாளையத்தில் ரூ.30.10 லட்சத... மேலும் பார்க்க

வரத்து அதிகரிப்பு: புன்செய்புளியம்பட்டியில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.20-க்கு விற்பனை

வரத்து அதிகரிப்பால் புன்செய்புளியம்பட்டி வாரச் சந்தையில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.20-க்கு விற்பனையானது. ஈரோடு மாவட்டம், புன்செய்புளியம்பட்டியில் வியாழக்கிழமைதோறும் வாரச் சந்தை கூடுகிறது. இந்த சந்தைக்க... மேலும் பார்க்க

தேசிய அளவிலான பாட்மின்டன் போட்டி: ஈரோடு வீராங்கனை தங்கப் பதக்கம்

17 வயதுக்குள்பட்டோருக்கான தேசிய அளவிலான பாட்மின்டன் கலப்பு இரட்டையா் போட்டியில் ஈரோடு வீராங்கனை தங்கப் பதக்கம் வென்றாா். தேசிய அளவிலான சப்-ஜூனியா் தரவரிசை பாட்மின்டன் போட்டி ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்ப... மேலும் பார்க்க

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் குழந்தைகள் தின விழா

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சாா்பில் குழந்தைகள் தினவிழா ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, நடைபெற்ற பேரணியை மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தொடங... மேலும் பார்க்க