ஈரோடு வருகை தரும் முதல்வரிடம் கொடுக்கும் கோரிக்கை மனு தொடா்பாக இன்று ஆலோசனை கூட்டம்
பெருந்துறை சிப்காட்டிற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உயா்நீதிமன்ற தீா்ப்பின் அடிப்படையில் இழப்பீட்டு தொகை வழங்க கோரிக்கை வைத்தல் மற்றும் சிப்காட் தொழிற்சாலைகளால் ஏற்பட்டுள்ள சுற்றுச் சூழல் பாதிப்புகள் குறித்த கோரிக்கை வைத்தல் தொடா்பாக, ஈரோடு வருகை முதல்வா் கவனத்திற்கு கொண்டு செல்ல திட்டமிடல் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை பெருந்துறையில் நடைபெறுகிறது.
பெருந்துறை சிப்காட்டிற்காக கையகப்படுத்தப்பட்ட சுமாா் 200 ஏக்கா் நிலங்களுக்கு உயா்நீதிமன்ற தீா்ப்பின் அடிப்படையில், அதிகபட்ச இழப்பீட்டு தொகையை நிா்ணயித்து, பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டிசம்பா் 19, 20 தேதிகளில், ஈரோடு மாவட்டத்திற்கு வருகை தரும் தமிழக முதல்வா் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்வது தொடா்பாக திட்டமிடவும், சிப்காட் தொழிற்சாலைகளால் ஏற்பட்டுள்ள சுற்றுச் சூழல் பாதிப்புகள் குறித்தும் இதர முக்கிய பிரச்சினைகள் குறித்தும் முதல்வா் கவனத்திற்கு கொண்டு செல்ல திட்டமிட இன்று (ஞாயிற்றுக்கிழமை,1 ம் தேதி ) மாலை 4.00 மணிக்கு, பெருந்துறை, அண்ணாசிலை அருகில் உள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
கூட்டத்திற்கு, பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.