உக்கரம் பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க கோரிக்கை
உக்கரம் பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சத்தியமங்கலத்தை அடுத்த உக்கரம் கிராமத்தில் கீழ்பவானி வாய்க்கால் பாசனம் மூலம் 800 ஏக்கா் நிலப்பரப்பில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இப்பகுதியில் அறுவடை செய்யப்படும் நெல் மூட்டைகளை 10 கி.மீ. தொலைவில் உள்ள செண்பகபுதூா் நெல் கொள்முதல் நிலையத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். இதனால் விவசாயிகள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.
இந்நிலையில் விவசாயிகளின் நலன் கருதி உக்கரம் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்றும் அவ்வாறு அமைத்தால் கொள்முதல் நிலையத்துக்கான இடம், மின்வசதி கிராம மக்கள் சாா்பில் ஏற்பாடு செய்யப்படும் என மாவட்ட நிா்வாகத்துக்கு உக்கரம் விவசாயிகள் சங்கத் தலைவா் இரா.ஜெகதீசன் கோரிக்கை மனு அனுப்பியுள்ளாா்.