செய்திகள் :

உக்ரைனுக்கு ஏவுகணை வழங்கும் நாடுகள் மீதும் தாக்குதல் நடத்தப்படும்: ரஷிய அதிபர்

post image

ரஷியா மீது தாக்குதல் நடத்த உக்ரைனுக்கு ஏவுகணை வழங்கும் நாடுகள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரஷியா - உக்ரைன் இடையேயான போர் 1,000 நாள்களை கடந்துள்ள நிலையில், தங்களுடன் இணைந்து போரிடுவதற்காக ஆயிரக்கணக்கான வட கொரிய ராணுவ சிறப்புப் படையினரை ரஷியா வரவழைத்துள்ளது.

இதற்குப் பதிலடியாக, போரில் உக்ரைன் எல்லைக்குள் உள்ள ரஷிய நிலைகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக மட்டுமே தாங்கள் வழங்கியிருந்த அதிநவீன ‘அட்டாக்கம்ஸ்’ ஏவுகணைகளை, ரஷிய பகுதிகள் மீதும் வீசலாம் என்று அமெரிக்கா அனுமதி அளித்தது.

அதன் எதிா்வினையாக, அணு ஆயுத பலம் பொருந்திய நாடுடன் தங்கள் மீது தாக்குதல் நடத்தும் அணு ஆயுத பலமற்ற நாட்டின் மீதும் அணு குண்டுகளை வீசுவதற்கு வகை செய்யும் வகையில் தனது அணு ஆயுதக் கொள்கையில் ரஷியா மாற்றம் கொண்டுவந்தது.

இதனிடையே, மேற்கத்திய நாடுகளை எச்சரிக்கும் விதமாக, பல ஆயிரம் கி.மீ. தொலைவு சென்று தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட ஐசிபிஎம் ரக ஏவுகணைகளை மிகவும் பக்கத்தில் இருக்கும் உக்ரைன் நகர் மீது வியாழக்கிழமை ரஷியா தாக்குதல் நடத்தியுள்ளது.

இதையும் படிக்க : ‘ஐசிபிஎம்’ ஏவுகணை மூலம் ரஷியா தாக்குதல்

இதனைத் தொடர்ந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய புதின் பேசியதாவது:

"ரஷியாவின் புதிய ஏவுகணையை நிறுத்துவதற்கு அமெரிக்க வான் பாதுகாப்பு அமைப்புகளால் முடியாது. இது ஒலியின் வேகத்தைவிட பத்து மடக்கு அதிவேகத்தில் செல்லும். ரஷியாவை தாக்க ஏவுகணைகள் வழங்கும் உக்ரைனின் நட்பு நாடுகளுக்கு எதிராகவும் இது பயன்படுத்தப்படும்.

எங்கள் நாட்டுக்கு எதிராக ஆயுதங்களைப் பயன்படுத்த அனுமதிக்கும் நாடுகளின் ராணுவத்துக்கு எதிராக எங்கள் ஆயுதங்களைப் பயன்படுத்த எங்களுக்கு உரிமை உண்டு என்று நாங்கள் நம்புகிறோம்.

உக்ரைனின் ஆக்கிரமிப்பு தொடர்ந்தால், நாங்கள் தக்க பதிலடி கொடுப்போம். இதுகுறித்து மேற்கத்திய நாடுகள் தீவிரமாக சிந்திக்க வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.

வடக்கு கலிபோர்னியாவைத் தாக்கிய புயல்! கனமழை, கடும் பனிப்பொழிவு!

வடக்கு கலிபோர்னியாவில் ஏற்பட்ட புயலால் கனமழை, கடும் பனிப்பொழிவால் மக்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். வடக்கு கலிபோர்னியாவை ஒரு மிகப்பெரிய புயல் தாக்கியதில் கடுமையான பனிப்பொழிவு மற்றும் கனமழை பெய்த... மேலும் பார்க்க

“3 ஆம் உலகப் போர் தொடங்கிவிட்டது” -உக்ரைன் முன்னாள் ராணுவத் தளபதி!

ரஷியா - உக்ரைன் போர் நடைபெற்றுவருவதற்கு மத்தியில் மூன்றாம் உலகப் போர் தொடங்கிவிட்டதாக உக்ரைன் முன்னாள் ராணுவத் தளபதியும் பிரிட்டனுக்கான தற்போதைய உக்ரைன் தூதருமான வலேரி ஜலுஷ்னி தெரிவித்துள்ளார்.உக்ரைன்... மேலும் பார்க்க

நைஜீரியா, பிரேசில் பயணம்! தலைவர்களுக்கு பரிசுப் பொருள் வழங்கிய பிரதமர் மோடி!

நைஜீரியா, பிரேசில், கயானா சுற்றுப்பயணத்தின் போது தலைவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி பரிசுப் பொருள்களை வழங்கினார்.இந்திய பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் பிரேசில், நைஜீரியா, கயானா ஆகிய நாடுகளுக்கு சுற... மேலும் பார்க்க

லாவோஸில் விஷச் சாராயத்துக்கு 6 சுற்றுலா பயணிகள் பலி!

லாவோஸில் விஷச் சாராயம் அருந்தி பலியான சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது. தெற்காசிய நாடுகளில் ஒன்றான லாவோஸ் நாட்டிற்கு சுற்றுலா சென்ற பயணிகள், வியங் நகரில் உள்ள மதுபான விடுதியில் அண்மையில்... மேலும் பார்க்க

லண்டனில் அமெரிக்க தூதரகம், விமானநிலையம் அருகே வெடிகுண்டுகள்!

லண்டனில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் காட்விக் விமானம் நிலையம் அருகே ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்படும் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது.வெடிகுண்டுகள் கைப... மேலும் பார்க்க

ஒரு ப்ரெட் பாக்கெட் ரூ. 1100-க்கு விற்கப்படும் அவலம்! இஸ்ரேல் போரால் காஸாவில் கடும் பஞ்சம்!!

இஸ்ரேலின் தாக்குதலால் காஸாவில் லட்சக் கணக்கானோர் வறுமையில் தவித்து வருவதாக காஸா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸா மீதான இஸ்ரேலின் தொடர் தாக்குதலால் காஸாவின் பல பகுதிகளில் பசியிலும், வறுமைய... மேலும் பார்க்க