உங்கள் சமையல் திறமைக்கான சவால் மேடையில் ”EXO-வின் ஹெல்த்தி டிஃபன் சேலஞ்”
கடந்த வருடம் தமிழ்நாடு முழுவதும் 11 இடங்களில் 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்ட மாபெரும் அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார் போட்டி, இந்த வருடம் மீண்டும் இன்னும் பிரமாண்டமாக அவள் விகடன் ”சமையல் சூப்பர் ஸ்டார் சீசன் 2” தமிழ்நாடு முழுவதும் 13 இடங்களில் காரசாரமா நடைபெற இருக்கிறது.
உணவே மருந்து என்று இருந்த காலத்திலிருந்து நாம் மருந்தே உணவு என்ற காலத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம். சமைக்கும் உணவில் சுவை இருக்கிறதா என்று யோசிக்கும் நாம், அதில் ஆரோக்கியம் இருக்கிறதா என்பதை பெரும்பாலும் யோசிப்பதில்லை. உணவில் சுவையும், உடலில் ஆரோக்கியமும் வேண்டும் என்றால் நம் கவனம் உணவில் மட்டும் இருந்தால் எப்படி? உடம்புக்கு முழுமையான ஊட்டம் வேண்டுமெனில் உணவை எடுத்துச் செல்லும் லஞ்ச் பாக்ஸிலும் அதே கவனம் இருந்தால் தானே சாத்தியம்.
உங்கள் ஆரோக்கியத்தை Exo உறுதி செய்கிறது. கழுவப்படாத பாத்திரத்திலிருந்து 19 நிமிடத்திற்குள் 700% பாக்டீரியாக்கள் உருவாகின்றனவாம். ஆரோக்கியத்தையும் சுவையையும் பார்த்துப் பார்த்து சமைத்து சுத்தமற்ற பாத்திரங்களில் உங்கள் ஆரோக்கியத்தை நழுவ விடுவதா? Exo-வில் இருக்கும் ஆன்டி-பாக்டீரியல் உங்கள் பாத்திரங்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்கிறது.
அவள் விகடன் “சமையல் சூப்பர் ஸ்டார் சீசன் 2” இந்த மாபெரும் சமையல் போட்டியுடன் ஒரு பகுதியாக உங்கள் ஆரோக்கியத்தை உறுதி செய்யும் ‘EXO’-வும் இணைந்து ”ஹெல்த்தி டிஃபன் சேலஞ்” போட்டி ஒன்றினை நடத்தவுள்ளது.
’EXO-ன் ஹெல்த் டிஃபன் சேலஞ்’ போட்டியில் கலந்து கொள்ள:
முதல் தகுதி சுற்றுக்கு நீங்கள் எடுத்து வரும் உணவை டிஃபன் பாக்ஸ்களில் நேர்த்தியாக பேக் செய்து எடுத்து வர வேண்டும். இதில், தேர்ந்தெடுக்கப்படும் ஒரு வெற்றியாளர் அன்று நடைபெறும் நேரடி சமையல் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்படும் 10 பேரில் ஒருவராக பங்கு பெற வாய்ப்புள்ளது.
இதில், உணவு ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதில் உங்களுக்கு இருக்கும் கவனம், அதை எடுத்து வரும் லஞ்ச் பாக்ஸ்
சுத்தத்திலும் இருக்க வேண்டும். மேலும், இதில் தேர்வாகும்
வெற்றியாளருக்கு EXO-வின் நிச்சயப்பரிசும் காத்திருக்கிறது!
கடந்த வருடம் நடைபெற்ற ”EXO-வின் ஹெல்த்தி டிஃபன் சேலஞ்” போட்டியில் தேர்வாகி வெற்றிபெற்ற ரெசிபிகள்:
போட்டிகள் நடைபெறும் இடமும் தேதியும்:
மதுரை - 14 டிசம்பர் 2024
திருநெல்வேலி - 15 டிசம்பர் 2024
தஞ்சாவூர் - 04 ஜனவரி 2025
திருச்சி - 05 ஜனவரி 2025
ராமநாதபுரம் - 18 ஜனவரி 2025
காரைக்குடி - 19 ஜனவரி 2025
விழுப்புரம் - 25 ஜனவரி 2025
கோவை - 01 பிப்ரவரி 2025
சேலம் - 02 பிப்ரவரி 2025
வேலூர் - 08 பிப்ரவரி 2025
புதுச்சேரி - 09 பிப்ரவரி 2025
சென்னை வடக்கு - 15 பிப்ரவரி 2025
சென்னை தெற்கு - 16 பிப்ரவரி 2025
(மேற்கண்ட இடங்கள் மற்றும் தேதிகளில் மாற்றங்கள் இருப்பின் முறையாக அறிவிக்கப்படும்)
“சமையல் சூப்பர் ஸ்டார் சீசன் 2” போட்டியில் கலந்து கொள்ள மற்றும் போட்டி குறித்த விவரங்களுக்கு: www.vikatan.com/sss அல்லது 044- 6680 2990 என்ற எண்ணிற்கு Missed call கொடுத்து உங்கள் வருகையை பதிவு செய்து போட்டி குறித்த விதிமுறைகளை தெரிந்து கொள்ளுங்கள்.