`உங்க நண்பர் சஞ்சீவுடன் என்னதான் பிரச்னை?’ - நடிகர் ஶ்ரீகுமார் சொல்வது என்ன?
விஜய் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகத் தொடங்கியிருக்கிற 'தனம்' தொடரில் கமிட் ஆகி இருக்கிறார் நடிகர் ஶ்ரீகுமார். பிரபல இசையமைப்பாளர் சங்கர் கணேஷின் மகன், நடிகை ஷமிதாவின் கணவர் என இவருக்கு வேறு சில அடையாளங்கள் இருந்தாலும் எவற்றையும் விசிட்டிங் கார்டாக பயன்படுத்த நினைக்காதவர். டிவிக்கு வந்து சுமார் 25 ஆண்டுகள் ஓடிவிட்ட போதும், இன்றும் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்திருக்கிற இவர் இதற்கு முன் ஜீ தமிழில் 'யாரடி நீ மோகினி', சன் டிவியில் 'வானத்தப் போல' ஆகிய ஹிட் சீரியல்களில் நடித்திருந்தார்.
'தனம்' தொடரில் கெஸ்ட் ரோல், அதாவது தொடரில் ஆரம்ப சில எபிசோடுகளில் மட்டுமே வருவீர்கள் என்கிறார்களே' என்ற கேள்வியுடன் அவரைச் சந்தித்தோம்.
'''கடைசியா 'வானத்தப் போல' தொடர் நல்ல ரீச்சைத் தந்தது. அது முடிஞ்சதும் வேற சீரியல் எதுலயும் கமிட் ஆகாம இருந்தேன். இடையில 'அமரன்' உள்ளிட்ட சில படங்கள்ல சின்னச் சின்ன ரோல் பண்ற வாய்ப்பு வந்தது.
இதுக்கு முன்னாடி 'தெறி'யிலயும் சரி, 'அமரன்'லயும் சரி சின்ன ரோல்தான். ஆனா ஓடுற படங்கள்ல நீங்க இருக்கணும்'னு என் மனைவி சொல்லியிருக்காங்க. சீரியல்களைப் பொறுத்தவரை 'அகல்யா', 'சிவசக்தி' தொடங்கி இப்ப வரைக்கும் எனக்கான கேரக்டர் கிடைச்சிட்டே இருக்கு. எனக்கு இந்த வாய்ப்புகளை ஜீசஸ் தர்றார்னு நான் நம்பறேன்.

வாய்ப்பு கிடைச்சிடுச்சுன்னா, அந்தக் கேரக்டருக்கு என்ன செய்யணுமோ அதை இருநூறு சதவிகிதம் செய்யணும்னு நினைப்பேன். இந்த ஒரு விஷயத்தாலதான் இன்னைக்கு வரைக்கும் என்னால டிவியில இருக்க முடியுது.
'தனம்' தொடரைப் பொறுத்தவரை கெஸ்ட் ரோல்னு சொல்லிதான் வந்தாங்க. 'எதுக்குங்க அப்படி நடிக்கணும்'னுதான் முதல்ல கேட்டேன். கதை பத்திக் கொஞ்சம் கேளுங்கனு சொன்னாங்க. உடலுறுப்பு தானம் பண்ற கேரக்டர் அதுனு கேட்ட அந்த நிமிஷமே எனக்கு கனெக்ட் ஆகிடுச்சு.
`சஞ்சீவுடன் என்ன பிரச்னை?’
ஏன்னா, இருபது வருஷத்துக்கு முன்னாடியே என்னுடைய உடல்ல மற்றவர்களுக்குப் பயன்படக் கூடிய எல்லா உறுப்புகளையும் தானம் செய்து எழுதிக் கொடுத்தவன் நான். இந்த ஒரு விஷயத்தாலேயே கொஞ்ச எபிசோடுன்னாலும் பரவால்லனு நடிக்கச் சம்மதிச்சேன்'' என்றவரிடம்
சக நடிகர் சஞ்சீவுடன் என்ன பிரச்னை என்ற கேள்வியையும் வைத்தோம்.
''சஞ்சீவும் நானும் இன்னைக்கு நேத்து நண்பர்கள் இல்லை. டிவிக்கு வந்த நாள்ல இருந்தே இருந்து வர்ற நட்பு எங்களுடையது. அவனும் விஜய் சாரும் ஒருகாலத்துல நண்பர்களா இருந்தவங்க. ஆனா இன்னைக்கு விஜய் சார் இருக்கிற இடம் வேற. அதனால இப்ப பழைய விஷயங்களைப் பத்திப் பொதுவெளியில பேசறப்ப கொஞ்சம் கவனமா பேசணும். இல்லாட்டி ட்ரோல் மெட்டீரியலா ஆகிடுவோம். நானும் நடிகர் சூர்யா சாரும் ஒரு நேரத்துல ஒரே இடத்துல பின் வரிசையில நின்னு டான்ஸ் ஆடினவங்கதான். ஆனா இன்னைக்கு அப்ப நடந்ததையெல்லாம் ஓப்பனா பேசறேன்னு சொல்லி எல்லாத்தையும் பேசினா அதை யாரும் ரசிப்பாங்களா என்ன? இதைத்தான் சொன்னேன்.
ஆனா நானுமே இதை நேரடியா அவன்கிட்டயே சொல்லியிருக்கலாம். பொதுவெளியில சொல்லியிருக்கக் கூடாதுன்னு பிறகு தோணுச்சு. உடனே ஸாரியும் கேட்டுட்டேன். அவனுமே அதைப் பெரிசா எடுத்துக்கலை'' என்கிறார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
