செய்திகள் :

`உசுர கையில பிடிச்சிட்டு பிழைப்பு நடத்துறோம்'- சிதிலமடைந்த நகராட்சி வணிக வளாகம்; குமுறும் வணிகர்கள்!

post image

திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையம் அருகே நகராட்சிக்குச் சொந்தமான அண்ணாமலை வணிக வளாகங்கள் உள்ளது . இங்கு மொத்தம் 80க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகிறது. இந்த இடத்தில் நெட் சென்டர், போட்டோ ஸ்டுடியோ, துணிக்கடை, உணவகங்கள், தொலைபேசி கடை, தொலைக்காட்சி பழுது பார்க்கும் கடை போன்ற பல்வேறு கடைகள் இயங்கி வருகிறது. இந்த வணிக வளாகம் 35 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. பழைய கட்டடம் என்பதால் மிகவும் சேதமடைந்து எவ்வித பராமரிப்பின்றி கிடக்கிறது.

கடைக்காரர்களின் குமுறல்:

இதைப் பற்றி அங்கு வேலை செய்து கொண்டிருக்கும் கடைக்காரர்களிடம் விசாரித்த போது, "ஆமாம் சார் இந்த இடம் பல வருடங்களாகவே இப்படி தான் உள்ளது. எந்த அதிகாரிகளும் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள். இது குறித்து பலமுறை நகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

நாங்களும் இங்கு சங்கம் அமைத்து இருக்கும் பிரச்னைகளை உயர் அதிகாரிகளுக்குப் பலமுறை கூறியுள்ளோம், மனுவை மட்டும் வாங்கி வெச்சுக்குறாங்க. ஆனால் எந்த பயனும் இல்லை. எப்படி இங்க தொழில் நடத்துறதுனே தெரியல‌. எங்க சொந்த பணத்தில் தான் மேற்க் கூறை இடிந்த போது இந்த கட்டடத்துக்கு மோல்டிங் போட்டோம். வரப் பணத்தை மொத்தம் இதற்கே செலவு செய்கிறோம். இதனால் நாங்கள் தான் பெரும் சிரமங்களை மேற்கொண்டு வருகிறோம். வீட்டுக்குப் போனாலும் ஒரே சண்டை தான்... ஏன் இந்த இடத்தில் கடை வைத்தோம் என்று யோசிக்கும் அளவுக்குத் தான் எங்கள் வாழ்க்கை ஓடுது.

`இஷ்டம் இருந்தால் இரு... இல்ல கடைய காலி பண்ணு என்கிறார்கள் அதிகாரிகள்.'

இந்த நிலைமை குறித்து எடுத்துப் பேசுவோம். ஆனால் கொஞ்சம்கூட வாடகையைக் குறைக்க மாட்டார்கள் . அநியாய வாடகையைத் தான் குடுத்துட்டு வர்றோம். இங்க ஒரு இருபது கடைக்கு மட்டும் தான் வாடகை மாறும். மீதி இருக்கும் கீழ் அடுக்கு கட்டடத்துக்கும் மேல் அடுக்கு கட்டடத்துக்கும் ஒரே மாதிரி வாடகை வசூல்செய்யிறங்க. குறைந்த பட்சம் எட்டாயிரத்துக்கு மேல தான் வாங்குறாங்க. அதுலயும் ஒரு சிக்கல் வந்துச்சு, ஒருமுறை வாடகை யாரும் கட்டாதிங்க, வாடகையைக் கொஞ்சம் ஏத்த போறோம் அப்படின்னு சொன்னாங்க. அது அப்படியே நிண்டு பெரிய தொகையாக மாறிவிட்டது தற்போது தான் அதை சிறுக சிறுக கொடுத்துக் கடை வாடகையை அடைத்துக் கொண்டு வருகிறோம்.

மேலும் கட்டடத்தின் மேலே புற்கள் வளர்ந்து மழை பெய்யும் பொழுது தண்ணீர் குளம்போல் தேங்கி கட்டடத்தில் இறங்கி வருகிறது. இதனால் கடைக்குள் இருக்கும் பல பொருள்கள் சேதமடைகிறது. இந்த விவகாரம் குறித்து எடுத்துப் பேசினால், இஷ்டம் இருந்தால் இரு இல்ல கடைய காலி பண்ணு என்கிறார்கள். கத்துக்கிட்டத் தொழிலும் விட முடியாமல் கடையும் விட முடியாமல் கஷ்டப்பட்டுத் தான் பொழப்பு நடத்திட்டுவர்றோம். ஆனால் அதிகாரிகள் வாடகையை மட்டும் மாதந்தோறும் சரியாக வசூலித்துச் செல்கின்றனர்.

இன்றைக்கோ நாளைக்கோ கட்டடம்...

இந்த கட்டடத்தில் ஒரு சில அறைகள் விழும் நிலையிலிருந்தால் பரவாயில்லை.. மொத்த கட்டடமே விழும் நிலையில் தான் உள்ளது. குறிப்பாக இதன் நுழைவு வாயிலில் படிக்கட்டுகள் அமைந்துள்ளது. அதில்தான் தினமும் ஏறி வருவோம். அப்படியே அதன் மேல் பார்த்தால், கட்டடத்தோட பில்லர் அப்படியே தெரியும், அது எப்பொழுது விழும் என்று யாருக்குமே தெரியாது. இன்றைக்கோ நாளைக்கோனு இருக்கிறது. மழைக்காலம் வேறயா இன்னும் கட்டடம் அமர்ந்து போய் இருக்கிறது. ஒவ்வொரு முறையும் நடக்கும் போது உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு நடந்து வருகிறோம். எங்கள் உயிருக்கு உத்தரவாதமே இல்லை, இப்படி உள்ளதால் பல முறை வெவ்வேறு படிக்கட்டுகளில் ஏறி கடைக்கு வருகிறோம்.

அலட்சியம் காட்டும் அதிகாரிகள்...

இந்த விவகாரத்தைத் தெளிவாகப் பல முறை பல அதிகாரிகளுக்கு எடுத்துக் கூறியுள்ளோம். ஆனால் எந்த மாற்றமும் நிகழவில்லை . ஆட்சியரிடம் இது குறித்துப் பேசினோம், விரைந்து நடவடிக்கை எடுக்க வழிவகை செய்கிறோம் என்றார். அவர்களுக்கு என்ன... போவது எங்கள் உயிர் ஆச்சே... அவங்க எப்படி இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்பாங்க. அவங்க தொடர்ந்து அலட்சியத்தை மட்டும் தான் காட்டி வருகிறார்கள்.

நஷ்ட ஈடு வேண்டும்...

கம்பியூட்டர், டீவி, கேமரா, சீலிங் பேன் இது போன்ற எண்ணற்ற பொருட்கள் சேதமடைந்து உள்ளது. கட்டடத்திற்கும் பல முறை எங்கள் சொந்த செலவில் பணம் செலவழித்து வருகிறோம். முன்பு கூறியது போல் எங்கள் பொழப்பே நஷ்டத்தில் தான் ஓடுது. எதாவது நஷ்ட ஈடு ஏற்பாடு செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும்" என்றனர் வேதனையாக.

இதைப் பற்றிச் சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகளிடம் விசாரித்தபோது, ``உயர் அதிகாரிகள் எங்களிடம் என்ன சொல்கிறார்களோ... அதைத்தான் செய்து கொண்டு வருகிறோம். நாங்கள் ஏதும் புதிதாகச் செய்வதில்லை. கடைக்காரர்கள் கொடுத்த மனுவை எல்லாமே மேல் இடத்துக்கு பாஸ் செய்து கொண்டுதான் இருக்கிறோம். இந்த இடத்தை சீரமைக்கவோ அல்ல இடித்துக் கட்டுவதற்கோ இதுவரை எங்களுக்கு எந்த நிதியும் ஒதுக்கவில்லை" என்றனர்.

Aadhar Card: 'இன்னும் இரண்டு நாள்களே இலவசம்..!' - ஆதாரை இலவசமாக அப்டேட் செய்வது எப்படி? | How to?

10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதார் அட்டையில் நமது தகவல்களை அப்டேட் செய்வது அவசியம். காரணம், அந்த 10 ஆண்டுகளில் முகத்தோற்றம் முதல் முகவரி வரை மாறியிருக்கலாம். பல இடங்களில் ஆதார் அட்டை அடையாள அட்டையாக செயல்ப... மேலும் பார்க்க

Syria: குடும்ப ஆட்சிக்கு முடிவுகட்டிய கிளர்ச்சியாளர்கள் - சிரியா பிரச்னையால் இந்தியாவுக்கு பாதிப்பு?

மத்திய கிழக்கு நாடான சிரியாவை, 53 ஆண்டுகளாக ஆட்சி செய்துவந்த அசாத் குடும்பத்தின் ஆட்சியைக் கவிழ்த்திருக்கிறார்கள் கிளர்ச்சியாளர்கள்!அசாத் குடும்ப ஆட்சி:சிரியாவில் பிற்படுத்தப்பட்ட இனமாகக் கருதப்படும் ... மேலும் பார்க்க

CAG Report: 'ஏகப்பட்ட காலி பணியிடங்கள்' - தமிழ்நாடு சுகாதாரத்துறை குறித்து ரிப்போர்ட்

2016 - 2022-ம் ஆண்டு, தமிழ்நாடு பொது சுகாதார கட்டமைப்பு மற்றும் சுகாதார சேவை துறை பராமரிப்பு பற்றிய இந்திய தலைமை தணிக்கையகம் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, தமிழ்நாடு மாநில சுகாதார துறையில் கு... மேலும் பார்க்க

CAG Report: தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் உயர்வு... எவ்வளவு தெரியுமா?!

நேற்று இந்திய தலைமை கணக்கு தணிக்கையகம் சில அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. அதில் ஒன்றான 2022-23 ஆண்டிற்கான தமிழ்நாட்டின் மாநில நிதிநிலை அறிக்கை படி, 2022 - 23 ஆண்டில், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.23... மேலும் பார்க்க

தூத்துக்குடி: "எங்க ஊர் சுடுகாடு மாதிரி இருக்குது" - 23 ஆண்டுகளாகப் போராடும் மக்களை கவனிக்குமா அரசு?

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகேயுள்ள ஊர் கணேசபுரம். இங்கு சுமார் இருநூறு பட்டியலின குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த மக்கள் வாழ்வில் முன்னேற வேண்டும் என்பதற்காகக் கடந்த 2001-ம் ஆண்டு, அ... மேலும் பார்க்க

உ.பி: 185 வருட பழைமையான மசூதியின் ஒரு பகுதியை இடித்த மாவட்ட நிர்வாகம்; போலீஸார் குவிப்பு!

பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் சட்டவிரோத கட்டுமானம் என்ற பெயரில் பெரும்பாலும் சிறுபான்மையினருக்கெதிராக நடைபெறும் புல்டோசர் நடவடிக்கைகள் தொடர்பான வழக்கில், கடந்த மாதம் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றைப்... மேலும் பார்க்க