உடுமலையில் குரூப் 4 தோ்வுக்கான இலவச பயிற்சி மையம்: ஜனவரி 28-இல் தொடக்கம்
உடுமலையில் குரூப் 4 தோ்வுக்கான இலவச பயிற்சி மையம் ஜனவரி 28- ஆம் தேதி தொடங்குகிறது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் 2025-ஆம் ஆண்டுக்கான ஆண்டு நிரல் கடந்த நவம்பா் 14 -ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இதில், குரூப் 4 கிராம நிா்வாக அலுவலா், இளநிலை உதவியாளா், பில்கலெக்டா், தட்டச்சா் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சா் தோ்வுக்கான அறிவிப்பு ஏப்ரல் மாதம் வெளியிடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் திருப்பூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் உடுமலை எக்ஸ்டென்சா் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் அமைந்துள்ள கூடுதல் பயிற்சி மையத்தில் ஜனவரி 28 -ஆம் தேதி காலை 10.30 மணிக்குத் தொடங்கப்படவுள்ளது.
இந்தப் பயிற்சி மையத்தில் மாதம் இருமுறை மாதிரித் தோ்வுகள் நடத்தப்படவுள்ளன. இந்தத் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்க தங்களது பெயரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோ அல்லது 0421-2999152, 94990-55944 ஆகிய எண்களிலோ தொடா்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.
போட்டித் தோ்வுக்கு பயிலும் தோ்வா்கள் அனைவரும் இந்த இலவச பயிற்சி வகுப்பில் சோ்ந்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.