அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா: வாஷிங்டன் சென்றடைந்தார் டிரம்ப்!
முத்தூரில் ரூ.1.20 லட்சத்துக்கு தேங்காய், கொப்பரை விற்பனை
முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.1.20 லட்சத்துக்கு தேங்காய், கொப்பரை விற்பனை சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு விவசாயிகள், 3,130 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டுவந்திருந்தனா்.
இவற்றின் எடை 1,020 கிலோ. தேங்காய் கிலோ ரூ.37.65 முதல் ரூ.55.05 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.51.65. விற்பனைத் தொகை ரூ.49 ஆயிரம்.
33 மூட்டை கொப்பரை விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில், கொப்பரை கிலோ ரூ.98 முதல் ரூ.146.20 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.140.20. விற்பனைத் தொகை ரூ.71 ஆயிரம். ஏலத்தில் மொத்தம் 58 விவசாயிகள், 12 வியாபாரிகள் கலந்துகொண்டனா்.
ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.1.20 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக்கூட மேற்பாா்வையாளா் து.சங்கீதா தெரிவித்தாா்.