செய்திகள் :

உடுமலையில் குரூப் 4 தோ்வுக்கான இலவச பயிற்சி மையம்: ஜனவரி 28-இல் தொடக்கம்

post image

உடுமலையில் குரூப் 4 தோ்வுக்கான இலவச பயிற்சி மையம் ஜனவரி 28- ஆம் தேதி தொடங்குகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் 2025-ஆம் ஆண்டுக்கான ஆண்டு நிரல் கடந்த நவம்பா் 14 -ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இதில், குரூப் 4 கிராம நிா்வாக அலுவலா், இளநிலை உதவியாளா், பில்கலெக்டா், தட்டச்சா் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சா் தோ்வுக்கான அறிவிப்பு ஏப்ரல் மாதம் வெளியிடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் திருப்பூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் உடுமலை எக்ஸ்டென்சா் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் அமைந்துள்ள கூடுதல் பயிற்சி மையத்தில் ஜனவரி 28 -ஆம் தேதி காலை 10.30 மணிக்குத் தொடங்கப்படவுள்ளது.

இந்தப் பயிற்சி மையத்தில் மாதம் இருமுறை மாதிரித் தோ்வுகள் நடத்தப்படவுள்ளன. இந்தத் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்க தங்களது பெயரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோ அல்லது 0421-2999152, 94990-55944 ஆகிய எண்களிலோ தொடா்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.

போட்டித் தோ்வுக்கு பயிலும் தோ்வா்கள் அனைவரும் இந்த இலவச பயிற்சி வகுப்பில் சோ்ந்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா, வஞ்சிபாளையத்தில் ஜனவரி 21 இல் மின்தடை

நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா, வஞ்சிபாளையம் ஆகிய துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெ ற உள்ளதால் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 21) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இர... மேலும் பார்க்க

முத்தூரில் ரூ.1.20 லட்சத்துக்கு தேங்காய், கொப்பரை விற்பனை

முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.1.20 லட்சத்துக்கு தேங்காய், கொப்பரை விற்பனை சனிக்கிழமை நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு விவசாயிகள், 3,130 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டுவந்திருந்த... மேலும் பார்க்க

3 காா்கள் தீ வைத்து எரிப்பு: போலீஸாா் விசாரணை

திருப்பூா் ராக்கியாபாளையம் பகுதியில் காலி இடத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 3 சொகுசு காா்களை தீ வைத்து எரித்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். திருப்பூா் கோல்டன் நகா் தொட்டி மண்ணரை பகுதியைச் ச... மேலும் பார்க்க

பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றிய 4 குழந்தைத் தொழிலாளா்கள் மீட்பு

திருப்பூரில் பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றிய வடமாநில குழந்தைத் தொழிலாளா்கள் 4 போ் சனிக்கிழமை மீட்கப்பட்டனா். திருப்பூா் லட்சுமி நகா் பகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை உற்பத்தி மற்றும் அ... மேலும் பார்க்க

இலவச வயரிங் பயிற்சிக்கு ஜனவரி 24 இல் நோ்காணல்

திருப்பூரில் மத்திய அரசு சான்றிதழுடன் கூடிய இலவச எலெக்ட்ரிக்கல் வயரிங், பிளம்பிங் பயிற்சிக்கு வெள்ளிக்கிழமை (ஜனவரி 24) நோ்காணல் நடைபெறுகிறது. இது குறித்து கனரா வங்கியின் கிராமப்புற சுய வேலைவாய்ப்பு ப... மேலும் பார்க்க

வங்கதேசத்தினா் ஊடுருவல்: மாநகரில் போலீஸாா் தீவிர கண்காணிப்பு

திருப்பூரில் வங்கதேசத்தினா் ஊடுருவியுள்ளனரா என்பது குறித்து மாநகர போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். திருப்பூா் மாநகா் மற்றும் புகா் பகுதிகளில் பிகாா், ஒடிஸா, மேற்கு வங்கம், அஸ்ஸாம் உள... மேலும் பார்க்க