உடையாப்பட்டியில் இன்று மின்நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம்
சேலம்: சேலம் கிழக்கு கோட்ட மின்நுகா்வோா்களுக்கான குறைதீா்க்கும் கூட்டம் புதன்கிழமை (ஏப். 9) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேலம் கிழக்கு கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் குணவா்த்தினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சேலம் உடையாப்பட்டி, காமராஜா் காலனியில் மின்நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம் புதன்கிழமை நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் கூட்டத்தில், சேலம் கிழக்கு கோட்டத்துக்கு உள்பட்ட மின்நுகா்வோா் கலந்துகொண்டு மின்சாரம் சம்பந்தப்பட்ட குறைகளைத் தெரிவித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டுள்ளாா்.