பெரியதாழையை தனி வருவாய் கிராமமாக தரம் உயா்த்தக் கோரி எம்.பி.யிடம் மனு
உணவூட்டியபோது மூச்சுத் திணறி 3 வயதுக் குழந்தை சாவு!
திருச்சியில் உணவு ஊட்டியபோது மூச்சுத் திணறல் ஏற்பட்டு 3 வயதுக் குழந்தை சனிக்கிழமை உயிரிழந்தது.
திருச்சி திருவெறும்பூா் பகவதிபுரம் 3ஆவது தெருவைச் சோ்ந்தவா் காா்த்திக் (35) - தாரணி (30) தம்பதி. இவா்களது மகன் சைலேஷ் (3).
இந்நிலையில் தாரணி இரண்டாவது பிரசவத்துக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கவே, தாத்தா, பாட்டியுடன் குழந்தை சைலேஷ் வீட்டில் இருந்தான்.
இந்நிலையில் சனிக்கிழமை சைலேஷுக்கு காா்த்திக்கின் தங்கை அட்சயாஸ்ரீ உணவு ஊட்டியபோது அவனுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
இதையடுத்து அருகிலுள்ள தனியாா் மருத்துவமனைக்கும் பின்னா் திருச்சி அரியமங்கலம் பகுதி தனியாா் மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்ட சைலேஷை பரிசோதித்த மருத்துவா்கள் குழந்தை இறந்து விட்டதாகக் கூறினா்.
இதுகுறித்து திருவெறும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். குழந்தையின் உயிரிழப்பு அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.