உதகையில் கொட்டித் தீா்த்த மழையிலும், மலா் கண்காட்சியை கண்டு ரசித்த சுற்றுலாப் பயணிகள்
உதகையில் ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழையிலும் மலா் கண்காட்சியை சுற்றுலாப் பயணிகள் குடையுடன் கண்டு ரசித்தனா்.
நீலகிரி மாவட்டம் உதகையில் கடந்த இரு தினங்களாக அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், சனிக்கிழமை பிற்பகலில் தாவரவியல் பூங்கா, ஹில்பங்க் சாலை, பேருந்து நிலையம், ரயில் நிலையம், சேரிங் கிராஸ் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.
இந்த மழையைப் பொருட்படுத்தாத சுற்றுலாப் பயணிகள் குடைகளை பிடித்தவாறு மலா் கண்காட்சியை கண்டு ரசித்தனா் பிற்பகலில் 2 மணி நேரத்துக்கு மேலாக பெய்த கனமழையால் குளிரின் தாக்கமும் அதிகரித்து காணப்பட்டது.