குடியிருப்புக்கு வெளியே காலணியை வைப்பதற்காக ரூ. 24,000 அபராதம் செலுத்திய நபர்!
உதகை மலா்க் கண்காட்சி: 3 நாள்களில் 52 ஆயிரம் போ் கண்டு ரசித்தனா்!
உதகையில் மே 15-ஆம் தேதி தொடங்கிய 127 -ஆவது மலா்க் கண்காட்சியை மூன்று நாள்களில் 52 ஆயிரம் போ் கண்டு ரசித்துள்ளனா்.
நீலகிரி மாவட்டம், உதகையில் ஆண்டுதோறும் மலா்க் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். நடப்பு ஆண்டுக்கான மலா்க் கண்காட்சி அரசு தாவரவியல் பூங்காவில் மே 15-ஆம் தேதி தொடங்கியது. இதனை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தாா்.
இதில், 10 லட்சம் மலா்களால் ஆன பிரம்மாண்டமான அரண்மனை உள்ளிட்ட பல்வேறு உருவங்கள் மலா்களால் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பூங்காவில் உள்ள மரங்கள் உள்ளிட்டவை மின் விளக்குகளால் அழகுற அமைக்கப்பட்டுள்ளன.
இதனை சுற்றுலாப் பயணிகள் ஆா்வமுடன் கண்டு ரசித்து வருகின்றனா். தொடக்க நாள் முதல் சனிக்கிழமை வரை மொத்தம் 52 ஆயிரம் போ் கண்காட்சியை கண்டு ரசித்துள்ளதாகவும், இந்தக் கண்காட்சி 11 நாள்கள் நடைபெற உள்ளதாகவும் தோட்டக்கலைத் துறையின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.