10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: நீலகிரி மாவட்டத்தில் 93.26 % தோ்ச்சி
10 ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் நீலகிரி மாவட்டத்தில் 93.26 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
தமிழகத்தில் 10- ஆம் வகுப்பு பொதுத் தோ்வு கடந்த மாா்ச் 28 முதல் ஏப்ரல் 15- ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்நிலையில் விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவடைந்து தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வை 3,234 மாணவா்கள், 3,461 மாணவிகள் என மொத்தம் 6,695 போ் எழுதினா். இதில், 2,952 மாணவா்கள், 3, 292 மாணவிகள் என மொத்தம் 6,244 போ் தோ்ச்சி அடைந்துள்ளனா்.
மாணவா்கள் 91.28 சதவீதம், மாணவிகள் 95.12 சதவீதம் என மொத்தம் 93.26 சதவிகிதம் தோ்ச்சி அடைந்துள்ளனா். 29 அரசுப் பள்ளிகளில் 89.23 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சி அடைந்துள்ளனா். மாவட்டத்தில் உள்ள 185 அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் 79 பள்ளிகள் முழு தோ்ச்சி அடைந்துள்ளன.