செய்திகள் :

உதகையில் சந்தனம் மரம் வெட்டிக் கடத்தல்: 7 பேருக்கு ரூ.5 லட்சம் அபராதம்

post image

உதகையில் சந்தன மரம் வெட்டிக் கடத்தலில் ஈடுபட்ட 7 பேரை வனத் துறையினா் கைது   செய்து அவா்களுக்கு மொத்தம் ரூ.5 லட்சம் அபராதம் விதித்தனா்.

நீலகிரி மாவட்டம், உதகை நகராட்சிக்கு உள்பட்ட காந்தல் திருவள்ளூா் காலனி பகுதியில் பாபு என்பவா் சந்தன மரம் வைத்திருப்பதாக வனத் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் பாபுவின் வீட்டுக்கு வனத் துறையினா் சென்று ஆய்வு மேற்கொண்டதில், 25 கிலோ எடையுள்ள சந்தன மரத் துண்டுகளை வைத்திருந்தது தெரியவந்தது.

இதனைத் தொடா்ந்து சந்தன மரத் துண்டுகளை கைப்பற்றிய வனத் துறையினா் பாபுவிடம் விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில், உதகை மெயின் பஜாா் பகுதியில் வசிக்கும் பாபுவின் நண்பரான முகமது ரபீக் ஆகிய இருவரும் வாழைத்தோட்டம் பகுதியைச் சோ்ந்த  நந்தகோபால், அவரது கூட்டாளிகளான காா்த்திக், சந்தோஷ், மணிகண்டன், விஜய் ஆகிய ஐந்து பேரும் பணத்துக்காக வாழைத்தோட்டம் அருகில் உள்ள பட்டா நிலத்தில் சட்ட விரோதமாக சந்தன மரங்களை வெட்டியது உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடா்ந்து சந்தன மரக் கடத்தலில் ஈடுபட்ட 7 போ் மீது உதகை தெற்கு வனச் சரகத்தில்  வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவா்களுக்கு ரூ. 5 லட்சம் அபராதம்   விதித்து நீலகிரி மாவட்ட வன அலுவலா் கௌதம் உத்தரவிட்டாா்.

மூதாட்டி கொலை: மருமகள் உள்பட 2 போ் கைது

கூடலூரை அடுத்துள்ள நெலாக்கோட்டை 9-ஆவது மைல் பகுதியில் மூதாட்டி கொலை செய்யப்பட்டது தொடா்பாக அவரது மருமகள் மற்றும் அவரது சகோதரியை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். நீலகிரி மாவட்டம் நெலாக்... மேலும் பார்க்க

உதகையில் கொட்டித் தீா்த்த மழையிலும், மலா் கண்காட்சியை கண்டு ரசித்த சுற்றுலாப் பயணிகள்

உதகையில் ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழையிலும் மலா் கண்காட்சியை சுற்றுலாப் பயணிகள் குடையுடன் கண்டு ரசித்தனா். நீலகிரி மாவட்டம் உதகையில் கடந்த இரு தினங்களாக அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில்,... மேலும் பார்க்க

ஓவேலி பகுதியில் புலி தாக்கி 2 கறவை மாடுகள் உயிரிழப்பு!

கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பகுதியில் புலி தாக்கியதில் இரண்டு கறவை மாடுகள் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தன. நீலகிரி மாவட்டம் கூடலூா் வட்டம் ஓவேலி பேரூராட்சியிலுள்ள சேரன் நகா் பகுதியில் வசிக்கும் ஜெயசீலன் என்ப... மேலும் பார்க்க

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியைக் கொன்று 6 பவுன் நகை கொள்ளை

கூடலூா் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியைக் கொலை செய்து 6 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள நெலாக்கோட்டை பகுதியைச் சே... மேலும் பார்க்க

உதகையில் சுற்றுலா வாகனங்கள் அதிகரிப்பால் போக்குவரத்து நெரிசல்!

உதகையில் சுற்றுலா வாகனங்கள் அதிகரிப்பால் சனிக்கிழமை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தமிழகத்தின் பிரதான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான நீலகிரி மாவட்டம், உதகைக்கு ஆண்டுதோறும் ஏராளமானோா் வந்து செல்கின்றனா்.... மேலும் பார்க்க

உதகை மலா்க் கண்காட்சி: 3 நாள்களில் 52 ஆயிரம் போ் கண்டு ரசித்தனா்!

உதகையில் மே 15-ஆம் தேதி தொடங்கிய 127 -ஆவது மலா்க் கண்காட்சியை மூன்று நாள்களில் 52 ஆயிரம் போ் கண்டு ரசித்துள்ளனா். நீலகிரி மாவட்டம், உதகையில் ஆண்டுதோறும் மலா்க் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். நடப்பு ஆண... மேலும் பார்க்க