குடியரசு நாள்: ஜன. 24, 26 தேதிகளில் சிறப்பு ரயில்கள் - தெற்கு ரயில்வே
உத்தமபாளையம் நீதிமன்றம் அருகே இளைஞர் குத்திக் கொலை!
உத்தமபாளையம்: தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே இளைஞரை கத்தியால் குத்தியதில் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் சேர்ந்த தொந்தி மகன் பிரசாந்த்( 34). இவர், அதே பகுதியைச் சேர்ந்த அணிஸ் ரகுமான் என்பவருக்கு வட்டிக்கு பணம் கொடுத்து வாங்கி வந்துள்ளார்.
இதன் மூலமாக பிரசாந்த் மற்றும் அணிஸ் ரகுமானின் மனைவிக்கு தகாத உறவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த அணிஸ் ரகுமான், வியாழக்கிழமை காலையில் நீதிமன்றம் அருகே தனியார் தங்கும் விடுதி வளாகத்தில் பிரசாந்தை கத்தியால் குத்திக் கொலை செய்து தலைமறைவானார்.
இதுகுறித்து உத்தமபாளையம் போலீசார் இறந்தவரின் சடலத்தை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய நபரைத் தேடி வருகின்றனர்.