Arasan: ``அப்போதிருந்தே வடசென்னை உலகத்தைப் பற்றி சிம்புவுடன் பேசி வந்தேன்" - வெற...
உத்தரப்பிரதேசம்: "இரவானால் மனைவி பாம்பாக மாறி என்னைக் கடிக்கிறார்" - வைரலான கணவனின் புகார்
உத்தரப்பிரதேசத்தில் வாலிபர் ஒருவர் மாவட்ட குறைதீர்ப்பு முகாமில் மாவட்ட நீதிபதியிடம் கொடுத்திருக்கும் புகார் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் சிதாப்பூர் மாவட்டத்தில் உள்ள லோத்ஷா என்ற கிராமத்தில் வசிக்கும் மீரஜ் என்பவர் தன் மனைவி நசீமுன் மீதுதான் நூதனமான புகாரைக் கொடுத்து இருக்கிறார்.
அவர் தன் மனைவி மீது கொடுத்துள்ள புகார் மனுவில், ''இரவு நேரத்தில் என் மனைவி பாம்பாக மாறி என்னைக் கடிக்க வருகிறார். பல முறை என்னைக் கொலை செய்ய முயன்றார்.

ஆனால் ஒவ்வொரு முறையும் நான் உறங்கிக்கொண்டிருக்கும் போது என்னைக் கடிக்கும் முன்பு எழுந்துவிடுவேன். என் மனைவி என்னை மனரீதியாக துன்புறுத்துகிறார். நான் உறங்கிக்கொண்டிருக்கும் போது எப்போது வேண்டுமானாலும் என்னை என் மனைவி கொலை செய்யக்கூடும்'' என்று தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இப்புகாரைப் பெற்றுக்கொண்ட மாவட்ட நீதிபதி அது பற்றி விசாரணை நடத்த போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். போலீஸார் நூதனமான இந்தப் புகார் குறித்து ஏற்கனவே விசாரணையைத் தொடங்கிவிட்டனர். விசாரணையில் ஒரு நாள் இரவு பாம்பாக மாறி என்னை விரட்டி விரட்டி ஒருமுறை கடித்துவிட்டதாக மீரஜ் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். அவரது கதை இப்போது சமூக வலைத்தளப் பக்கத்தில் வைரலாகி இருக்கிறது.
அவரது கதையைப் படித்த நெட்டிசன்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளனர். ஒருவர் காமெடியாக, 'நீங்கள் அவரது நாகமணியை மறைத்து வைத்திருப்பீர்கள்'என்று தெரிவித்துள்ளார்.
மற்றொருவர், 'நீங்களும் பாம்பாக மாறிவிடுங்கள்' என்று தெரிவித்துள்ளார். மற்றொருவர், 'திருமணத்திற்குப் பிறகு நீங்கள் நடிகை ஸ்ரீதேவியைப் பார்த்து இருக்கிறீர்கள். நீங்கள் அதிர்ஷ்டசாலி' என்று குறிப்பிட்டுள்ளார். 1986ம் ஆண்டு ஸ்ரீதேவி படம் ஒன்றில் பாம்பாக நடித்து இருந்தார்.