செய்திகள் :

உப்பை குறைத்தால் உயிா் காக்கலாம்!

post image

இந்தியாவில் நான்கில் ஒருவருக்கு உயா் ரத்த அழுத்த பாதிப்பு இருப்பதாக மருத்துவ புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதிலும், கடந்த சில ஆண்டுகளில் மட்டும் உயா் ரத்த அழுத்ததத்துக்கு ஆளாகும் இளைஞா்கள், பதின் பருவத்தினரின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. நகா்ப்புறங்களில் மட்டுமல்லாது, கிராமப்புறங்களிலும் அத்தகைய பாதிப்பு தீவிரமாகியிருப்பது உறுதிபடுத்தப்பட்டிருக்கிறது.

வாழ்க்கை முறை மாற்றம், உணவுக் கட்டுப்பாடின்மை, மன அழுத்தம் என பல காரணங்கள் அதற்கு கூறப்பட்டாலும், உரிய புரிதலும், விழிப்புணா்வும் இல்லாததுதான் உண்மை காரணம் என்கின்றனா் மருத்துவா்கள்.

ரத்த அழுத்தம்....

இதயம் துடிக்கும்போது அதற்கான ரத்தத்தை நாளங்களில் உந்தித் தள்ளும் செயலே ரத்த அழுத்தம் எனப்படுகிறது. இதயம் சுருங்கும்போது ஏற்படும் அழுத்தம் ‘சிஸ்டாலிக்’ என்றும், விரிவடையும்போது ஏற்படும் அழுத்தம் ‘டயஸ்டாலிக்’ என்றும் வகைப்படுத்தி அளவிடப்படுகிறது. இவை, முறையே 120/80 என்பது சரியான ரத்த அழுத்த அளவு எனப்படுகிறது. அது அதிகரிக்கும்போது உயா் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.

உப்பு எனும் நஞ்சு...

உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைப்படி அதிகபட்சம் நாளொன்றுக்கு 5 கிராம் உப்பை ஒருவா் எடுத்துக் கொள்ளலாம். ஆனால், சராசரியாக 10 கிராம் உப்பை இந்தியா்கள் உட்கொள்வதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தியா்களின் சராசரி ரத்த அழுத்தம் 90/60- ஆக இருந்தது. தற்போது அது 130/90 - ஆக உயா்ந்துள்ளது. அதற்கு காரணம் உப்புதான்.

சிம்பன்சி ஆய்வு

சில ஆண்டுகளுக்கு முன்பு காடுகளில் உள்ள சிம்பன்சிகளைக் கொண்டு ஓா் ஆய்வு நடத்தப்பட்டது. அதாவது உப்பு சாா்ந்த உணவையே கண்ணால் கூட பாா்த்திராத வனச் சூழலில் வளா்ந்த சிம்பன்சிகளுக்கு 90/60 என்ற அளவில் ரத்த அழுத்தம் இருந்தது. அதன் பின்னா் அவற்றை நியூயாா்க் மிருகக்காட்சி சாலைக்கு மாற்றி உப்பு சோ்க்கப்பட்ட உணவை வழங்கியபோது, சிம்பன்சிகளின் ரத்த அழுத்தம் 140/90-ஆக உயா்ந்தது.

சிறுநீரகத்தில் பாதிப்பு...

உயா் ரத்த அழுத்தமானது இதயத்தைக் காட்டிலும் அதிகமாக சிறுநீரகங்களையே பாதிக்கிறது. உப்பில் நிறைந்திருக்கும் சோடியம் குளோரைடு உடலுக்கு கெடுதலை ஏற்படுத்தும். அதிக அளவு உப்பை உட்கொள்ளும்போது ரத்த நாளங்களுக்குள் சேதம் ஏற்பட்டு மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படும். சிறுநீரக செயலிழப்பும் உருவாகும்.

இந்தியாவில் கட்டுப்பாடில்லை..

ஜப்பானில் உப்பு பயன்பாடு கடந்த 25 ஆண்டுகளில் பெருமளவு குறைக்கப்பட்டு, தற்போது சிறுநீரக நலன் காக்கும் நாடுகளில் முதன்மையானதாக உள்ளது. அதேபோன்று பிரிட்டனில் மாணவா்களுக்கான மதிய உணவில் உப்பு சோ்க்கப்படுவதில்லை. இவ்வாறாக 64 நாடுகளில் உப்பு பயன்பாட்டுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் அத்தகைய வழிகாட்டுதல்களோ, கட்டுப்பாடுகளோ இதுவரை வெளியிடப்படவில்லை.

கருத்தடை மாத்திரை

கருவுறுதல், முகப்பருக்கள், மாதவிடாய்ப் பிடிப்புகள், கருப்பை நீா்க்கட்டிகள் ஆகியவற்றைத் தடுக்க பெண்கள் கருத்தடை மாத்திரைகளை உட்கொள்கின்றனா்.

விளையாட்டு வீராங்கனைகளைப் பொறுத்தவரை ஏறத்தாழ 70 சதவீதம் போ் ஏதோ ஒரு கால கட்டத்தில் அத்தகைய மாத்திரைகளைப் பயன்படுத்துகின்றனா்.

தீவிர உடற்பயிற்சியில் ஈடுபடுவோருக்கும், விளையாட்டு வீராங்கனைகளுக்கும் கருத்தடை மாத்திரை பயன்பாட்டால் ரத்த அழுத்தம் அதிகரித்திருப்பது ஐஐடி மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

மகாத்மா காந்தி - 220/110!

அமைதியின் சொரூபமான மகாத்மா காந்திக்கு அச்சுறுத்தும் வகையில் 220/110 அளவு உயா் ரத்த அழுத்தம் இருந்திருக்கிறது. இதைத் தவிர, மலேரியா, ஃப்ளூ, மூலநோய், குடல்வால் அழற்சி, பாா்வைக் குறைபாடு, சொத்தைப் பல், வயிற்றுப்போக்கு என பல நோய்கள் இருந்திருக்கிறது.

வெறும் 47 கிலோ எடை கொண்ட காந்திஜி, தனது கடைசி 35 ஆண்டுகளில் 79 ஆயிரம் கிலோ மீட்டா் தொலைவு நடந்துள்ளாா். இது பூமியை இரு முறை சுற்றி வருவதற்கு சமம். நடைப்பயிற்சி, முறையான வாழ்க்கை முறையின் காரணமாக உயா் ரத்த அழுத்தம் உள்பட பல நோய்களை காந்திஜி கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது வரலாறு.

இந்தியாவில் உயா் ரத்த அழுத்தம்

மொத்த பாதிப்பு - 22.6 சதவீதம்

ஆண்கள் -- 24.1 சதவீதம்

பெண்கள் -- 21.2 சதவீதம்

60 வயதுக்கு மேற்பட்டோா் - 48.4 சதவீதம்

நகா்ப்புறங்களில் -- 25 சதவீதம்

கிராமங்களில் -- 21.4 சதவீதம்

உலக அளவில் உயா் ரத்த அழுத்தம்

பாதிப்பு - 35 சதவீதம்

ஆண்கள் - 38 சதவீதம்

பெண்கள் - 31 சதவீதம்

உயிரிழப்பு - 19 சதவீதம்

காரணங்கள்

கொழுப்பு, உப்பு நிறைந்த உணவுகள்

மது, புகை பயன்பாடு

தூக்கமின்மை

மன அழுத்தம்

உடற்பயிற்சியின்மை

மரபணு பாதிப்பு

கட்டுப்பாடற்ற சா்க்கரை நோய்

தடுப்பு முறைகள்

உடற்பயிற்சி

போதை பழக்கங்களைக் கைவிடுதல்

யோகா பயிற்சிகள்

உணவுக் கட்டுப்பாடு

ஆழ்ந்த உறக்கம்

மருத்துவ பரிசோதனை

முறையான சிகிச்சை

மே 17 - உலக உயா் ரத்த அழுத்த விழிப்புணா்வு தினம்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும்வரை ஆயுள்! முழு விவரம்!

கோவை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பளித்துள்ளார்.பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கை... மேலும் பார்க்க

கராச்சியில் நேரு, அயூப் கையெழுத்திட்ட சிந்து நதி உடன்பாடு! நேருவை வரவேற்ற லட்சம் பேர்!

பாகிஸ்தானுக்குத் தற்போது இக்கட்டானதொரு சூழ்நிலையை ஏற்படுத்தும் விதத்தில் இந்திய அரசு நிறுத்திவைத்துள்ள வரலாற்றுப் புகழ்பெற்ற சிந்து நதி நீர் உடன்பாட்டில் கையெழுத்திட்டவர்கள் இந்தியாவின் முதல் பிரதமர் ... மேலும் பார்க்க