“சிறுபான்மையினருக்கு அரணாக உறுதியாக நிற்போம்!” -முதல்வர் மு.க.ஸ்டாலின்
உமர் காலித்துக்கு இடைக்கால ஜாமீன்!
தில்லி கலவரத்தில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள முன்னாள் ஜேஎன்யு மாணவர் உமர் காலித்துக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு தில்லியில் 2020-ம் ஆண்டு பிப்ரவரியில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவத்தில் முக்கிய மூலையாகச் செயல்பட்டதாக இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் மற்றும் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் பிரிவுகள் மற்றும் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் உமர் காலித்திற்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக சிறையிலிருக்கு உமர் காலித்தின் ஜாமீன் மனு ஏற்கெனவே இரண்டு முறை நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : முகமூடி கிழிந்தது! மதவெறிக் கட்சியிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்? மமதா
இந்த நிலையில், உறவினரின் திருமணத்துக்காக இடைக்கால ஜாமீன் கோரி தில்லி கிழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் உமர் காலித் மனு அளித்திருந்தார்.
அவரின் கோரிக்கையை ஏற்று திருமணத்தில் கலந்து கொள்வதற்காக டிசம்பர் 28 முதல் ஜனவரி 3 வரை 7 நாள்கள் இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.