செய்திகள் :

உம்ரான் மாலிக் விலகல்

post image

இந்தியன் பிரீமியா் லீக் கிரிக்கெட் போட்டியில், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடா்ஸின் பௌலா் உம்ரான் மாலிக் காயம் காரணமாக இந்த சீசனில் இருந்து விலகினாா். இது அந்த அணிக்கு பின்னடைவாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீரை சோ்ந்த வேகப்பந்து வீச்சாளரான உம்ரான் மாலிக், கடந்த 2021 முதல் 2024 வரை சன்ரைசா்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வந்தாா். இந்நிலையில், அந்த அணியால் விடுவிக்கப்பட்ட அவா், இந்த சீசனுக்கான மெகா ஏலத்தில் கொல்கத்தா அணியால் ரூ.75 லட்சத்துக்கு வாங்கப்பட்டாா்.

இந்நிலையில் காயம் காரணமாக அவா் நடப்பு சீசனில் இருந்து விலகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அவரின் காயத்தின் தன்மை உள்பட எந்தவொரு தகவலும் தெரிவிக்கப்படவில்லை. உம்ரான் மாலிக்கிற்கான மாற்று வீரராக இடதுகை வேகப்பந்து வீச்சாளா் சேத்தன் சக்காரியாவை கொல்கத்தா ஒப்பந்தம் செய்துள்ளது.

மெகா ஏலத்தில் எந்த அணியாலும் வாங்கப்படாமல் போன அவரை, தற்போது கொல்கத்தா ரூ.75 லட்சத்துக்கு அணியில் சோ்த்துள்ளது.

உலகக் கோப்பை தகுதிச் சுற்று: 2 போட்டிகளில் இருந்து விலகிய மெஸ்ஸி!

ஆர்ஜென்டீனாவின் கேப்டன் மெஸ்ஸி உலகக் கோப்பை தகுதிச் சுற்றின் முக்கியமான 2 போட்டிகளிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு நடைபெற்ற கால்பந்து உலகக் கோப்பையை மெஸ்ஸி தலைமையிலான அணி வென்றது. ... மேலும் பார்க்க

2025 சனிப்பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நன்மை?

திருக்கணிதப்படி 2025 மார்ச் 29-ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நிகழ உள்ளது. வாக்கிய பஞ்சாங்கத்தின்படி அடுத்தாண்டு 2026 மார்ச் மாதம் நிகழ்கிறது. சனிப்பெயர்ச்சியால் நன்மை பெறும் ராசிகள், நன்மை தீமை கலந்து பெறும... மேலும் பார்க்க

குழந்தைகளை மையப்படுத்தி மீண்டும் ஒரு நிகழ்ச்சி!

நடிகை சிவாங்கி தொகுத்து வழங்கும் புதிய நிகழ்ச்சிக்கு நானும் ரெளடிதான் எனப் பெயரிடப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க குழந்தைகளை மையப்படுத்தி இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது. இதற்கு முன்பு குட்டி சுட்டிஸ் ந... மேலும் பார்க்க

அப்பா, அண்ணன் மிலிட்டரி; நான் மிமிக்ரி: வீர தீர சூரன் குறித்து சுராஜ்!

வீர தீர சூரன் படப்பிடிப்பு அனுபவங்கள் குறித்து நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு பேசியுள்ளார்.நடிகர் விக்ரம் நடிப்பில் உருவான வீர தீர சூரன் திரைப்படம் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சித்தா ... மேலும் பார்க்க

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றம்!

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் 18 நாள்கள் நடைபெறும் பங்குனித் திருவிழாவையொட்டி த்வஜாரோஹனம் என்... மேலும் பார்க்க