Fengal: ஷோ காட்டும் ஸ்டாலின்… வெடிக்கும் சசிகலா - Marakkanam Live Report | Cyclo...
உயர்வுடன் முடிந்த பங்குச் சந்தை! ஏற்றத்தில் புளூ சிப் நிறுவனப் பங்குகள்!
மும்பை : ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இன்போசிஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி ஆகிய பங்குகளை முதலீட்டாளர்கள் வாங்கியதால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் இன்று உயர்வுடன் முடிவடைந்தன.
மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 445.29 புள்ளிகள் உயர்ந்து 80,248.08 புள்ளிகளில் நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 144.95 புள்ளிகள் உயர்ந்து 24,276.05 புள்ளிகளாக உள்ளது. இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் அதிகபட்சமாக 80,337.82 புள்ளிகளாகவும், குறைந்தபட்சமாக 79,308.95 புள்ளிகளுடன் வர்த்தகமானது.
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள அல்ட்ராடெக் சிமெண்ட், ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல், அதானி போர்ட்ஸ், டெக் மஹிந்திரா, டைட்டன், மாருதி, மஹிந்திரா & மஹிந்திரா, டிவிஎஸ், டாடா ஸ்டீல், பஜாஜ் ஆட்டோ, டாடா மோட்டார்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்து முடிந்தது. அதே வேளையில் என்டிபிசி, ஹிந்துஸ்தான் யூனிலீவர், கோடக் மஹிந்திரா வங்கி, இண்டஸ் இண்ட் வங்கி மற்றும் லார்சன் அண்டு டூப்ரோ ஆகிய பங்குகள் சரிந்து முடிந்தது.
இதையும் படிக்க: இன்ஃபோசிஸ் நிறுவனத்திற்கு ரூ.283 கோடி அபராதம் விதிப்பு
மும்பை பங்குச் சந்தையில் 2,509 பங்குகள் ஏற்றத்திலும், 1,546 பங்குகள் சரிந்தும், 182 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமானது.
சிமெண்ட் பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் உயர்ந்த நிலையில், அல்ட்ராடெக் சிமெண்ட் பங்குகள் சுமார் 4 சதவிகிதம் லாபத்துடன், மும்பை பங்குச் சந்தையில் ரூ.11,639.65 என்று வர்த்தகமானது.
நிஃப்டி ஆட்டோ, ஐடி, மெட்டல், பார்மா மற்றும் ரியாலிட்டி துறை பங்குகள் 1 முதல் 3 சதவிகிதம் வரை உயர்ந்தன. மைக்ரோடெக் டெவலப்பர்ஸ், கோத்ரேஜ் பிராப்பர்ட்டீஸ், டிஎல்எஃப் மற்றும் பிரெஸ்டீஜ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டன. நவம்பர் மாத விற்பனைக்கு பிறகு ஆட்டோ பங்குகள் பெரும்பாலும் உயர்ந்து வர்த்தகமானது.
ஆசிய சந்தைகளில் சியோல் குறைந்தும், டோக்கியோ, ஷாங்காய் மற்றும் ஹாங்காங் உயர்ந்தும் முடிந்தது. ஐரோப்பிய சந்தைகள் பெரும்பாலும் சரிந்து வர்த்தகமானது. அமெரிக்க சந்தைகள் வெள்ளிக்கிழமையன்று உயர்ந்து முடிந்தது.
அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் வெள்ளிக்கிழமை ரூ.4,383.55 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர். உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.5,723.34 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.
உற்பத்தி மற்றும் சுரங்கத் துறைகளின் மெத்தன செயல்திறன் மற்றும் பலவீனமான நுகர்வு காரணமாக, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியானது, ஜூலை முதல் செப்டம்பர் வரையான காலகட்டத்தில், சுமார் 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 5.4 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.
இந்தியாவின் உற்பத்தித் துறை வளர்ச்சியானது நவம்பர் மாதத்தில், 11 மாதங்களில் இல்லாத அளவுக்கு 56.5 ஆக சரிந்தது.
உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.85 சதவிகிதம் உயர்ந்து பீப்பாய்க்கு 72.45 டாலராக உள்ளது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் கடந்த அமர்வில் (வெள்ளிக்கிழமை) 759.05 புள்ளிகள் உயர்ந்து 79,802.79 புள்ளிகளில் நிலைபெற்றது. நிஃப்டி 216.95 புள்ளிகள் உயர்ந்து 24,131.10 ஆக முடிந்தது.