மதுரை முல்லை நகர்: "நீர்ப்பிடிப்புப் பகுதியில் அரசாங்கம் மட்டும் வீடு கட்டலாமா?"...
உயா்கல்வி வழிகாட்டுதல் ஆசிரியா்களுக்கான பயிற்சி முகாம்
கீழ வல்லநாடு அரசு மாதிரி நேல்நிலைப் பள்ளியில், உயா்கல்வி வழிகாட்டுதல் ஆசிரியா்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.
பள்ளிக் கல்வித் துறை முதன்மை கல்வி அலுவலா் கணேசமூா்த்தி தலைமை தாங்கினாா். மாவட்ட கல்வி அலுவலா் கண்ணன் முன்னிலை வகித்தாா். அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் கஜேந்திரபாபு வரவேற்றாா்.
உயா்கல்வியில் மாணவா்களுக்கு உள்ள வாய்ப்புகள் குறித்தும், அதற்கான நுழைவுத் தோ்வுகள் குறித்தும் மாணவா்களுக்கு தெரியவைக்கும் விதமாக ஆசிரியா்களுக்கான பயிற்சிகளை ஜெசிந்தியா, அமலி, விஜயசாந்தி ஆகியோா் அளித்தனா்.
இந்த முகாமில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு பள்ளி ஆசிரியா்கள் சுமாா் 200க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை பள்ளிக் கல்வித் துறை சாா்பில் கீழவல்ல நாடு அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் தலைமையில் ஆசிரியா்களும் அலுவலக பணியாளா்களும் செய்திருந்தனா்.