செய்திகள் :

உயிர்சேதம் ஏற்படும் என ஆனந்தை எச்சரித்தோம்! எப்ஐஆரில் அதிர்ச்சித் தகவல்கள்!

post image

நாமக்கல் விஜய் பிரசாரக் கூட்டத்தில் தாமதம் ஏற்பட்டபோது உயிர்சேதம் ஏற்படும் என தவெக பொதுச் செயலர் ஆனந்தை எச்சரித்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை இரவு கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது.

நாமக்கல் பிரசாரத்துக்கு சனிக்கிழமை காலை 8.45 மணிக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், சென்னையில் இருந்தே காலை 8.45 மணிக்குதான் விஜய் புறப்பட்டார்.

இதனிடையே, நாமக்கல்லில் கூட்டத்தை அதிகரிக்க வேண்டுமென்றே விஜய் தாமதமாக வந்ததாக நாமக்கல் டவுன் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

எஃப்ஐஆரில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

நாமக்கல்லில் வேண்டுமென்றே விஜய்யின் வருகை தாமதப்படுத்தப்பட்டதால், கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியது. பல இடங்களில் நிபந்தனைகள் மீறப்பட்டதை தவெக நிர்வாகிகள் கண்டுகொள்ளவில்லை.

பிரதான சாலை வழியாக தாமதமாக வந்து போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி நிபந்தனைகளை மீறினர். பலமுறை அறிவுறுத்தியும், எச்சரித்தும் காவல்துறை சொன்னதை கேட்கவில்லை.

அசாதாரண சூழல் ஏற்பட்டு கூட்டநெரிசலில் உயிர்சேதம், கொடுங்காயம், மூச்சுத்திணறல் ஏற்படும் என தவெக பொதுச்செயலர் ஆனந்த், மாவட்ட செயலாளர் சதீஷை எச்சரித்தோம்.

நாமக்கல்லில் காத்திருந்த பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மக்கள் கூட்டத்தை அதிகப்படுத்தி, அரசியல் பலத்தை காட்டும் நோக்கத்துடன் விஜய்யின் வருகை வேண்டுமென்றே 4 மணிநேரம் தாமதமாக்கப்பட்டது.

பல மணிநேரம் காத்திருந்த மக்கள், போதிய தண்ணீர், உணவு, மருத்துவ வசதி செய்யப்படாததால், அதிக கூட்டத்தால் ஏற்பட்ட அழுத்தத்தாலும் வெய்யிலின் தாக்கம் காரணமாகவும் மக்கள் சோர்வடைந்தனர்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Namakkal Police registers case for violation of rules at TVK Meeting

இதையும் படிக்க : கரூர் பலி: செந்தில் பாலாஜிக்கு தொடர்பு! மக்கள் மீது தடியடி!! தவெக மனு

கரூர் பலி: ஹேமமாலினி தலைமையில் விசாரணைக் குழு

கரூர் கூட்ட நெரிசல் பலி சம்பவம் தொடர்பாக ஹேமமாலினி எம்.பி. தலைமையில் குழு அமைத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி உத்தரவிட்டுள்ளது.கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற தவெக தலைவர் விஜய் தலைமையிலான பிரசாரக் கூட்டத்தில் ... மேலும் பார்க்க

2 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் இரண்டு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்து. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.நாளை (30-09-2025), வடக்கு அந்தம... மேலும் பார்க்க

ஆயுத பூஜை: தென் மாவட்டங்கள் செல்வோருக்கு முக்கிய அறிவிப்பு!

ஆயுத பூஜை விடுமுறையைத் தொடர்ந்து தென் மாவட்டங்கள் செல்வோருக்கு செங்கல்பட்டு காவல்துறையினர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.ஆயுத பூஜை (புதன்), காந்தி ஜெயந்தி (வியாழன்) விடுமுறையைத் தொடர்ந்து வார இறு... மேலும் பார்க்க

ஆயுத பூஜை: சென்னை - மதுரை இடையே சிறப்பு ரயில்!

ஆயுத பூஜையையொட்டி சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு 2 சிறப்பு முன்பதிவில்லாத ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.எழும்பூர் - மதுரை சிறப்பு ரயில் சென்னை எழும்பூர் - மதுரை முன்பதிவில்லாத சிறப்பு ரயில்(06... மேலும் பார்க்க

கரூர் பலி: இரவில் உடற்கூராய்வு செய்யக் கூடாதா? உண்மை என்ன?

கரூரில் இரவு நேரத்தில் உடற்கூராய்வு செய்தது தொடர்பாக தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்புக் குழு விளக்கம் அளித்துள்ளது.கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் ... மேலும் பார்க்க

கரூர் பலி: விஜய் இன்று முக்கிய ஆலோசனை! அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

கரூரில் விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, தவெக தலைவர் விஜய் இன்று(செப். 29) ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.கரூர் சம்பவம் நடைபெற்ற சனிக்கிழமை இரவு முதல், கடந்... மேலும் பார்க்க