செய்திகள் :

உரத்தொழிற்சாலையில் வேலை: பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

post image

தேசிய உரத்தொழிற்சாலையின்கீழ் செயல்படும் ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் அண்ட் ஃபெர்டிலைசர்ஸ் நிறுவனத்தில் காலியாகவுள்ள பொறியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். Rectt/01/2025

பணி: Engineer

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:

1. Chemical

காலியிடங்கள் : 5

தகுதி : பொறியியல் துறையில் கெமிக்கல் பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

2. Electrical

காலியிடங்கள்: 2

தகுதி : பொறியியல் துறையில் Electrical, Electrical & Electronics/ Electrical & Instrumentation போன்ற ஏதாவதொரு பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

3. Information Tech-nology

காலியிடம் : 1

தகுதி: பொறியியல் துறையில் CSE,IT போன்ற ஏதாவதொரு பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும் அல்லது எம்சிஏ முடித்திருக்க வேண்டும்

4. Instrumentation

காலியிடங்கள்: 2

தகுதி: பொறியியல் துறையில் Instrumentation/Instrumentation & Control /Electrical & Electronics போன்ற ஏதாவதொரு பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

மிஸ்பண்ணிடாதீங்க... ரயில்வேயில் 9,970 உதவி லோகோ பைலட் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

5. Civil

காலியிடம் : 1

தகுதி : பொறியியல் துறையில் Civil பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

6. Mechanical

காலியிடங்கள்: 2

தகுதி : பொறியியல் துறையில் Mechanical பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் விண்ணப்பிப்போர் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ. 40,000 - 1.40.000

தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரரின் பணி அனுபவம் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இது குறித்த விபரம் மின்னஞ்சலில் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.700. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:www.rcfl.co.inஎன்ற இணையதளம் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 10.4.2025

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் ஆராய்ச்சிப் பணிகள்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின்(இஸ்ரோ) கீழ் செயல்பட்டு வரும் தரவு சேமிப்பு மற்றும் தகவல் பரிமாற்றத்திற்கான மையத்தில் காலியாகவுள்ள JRF மற்றும் Research Associate பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இர... மேலும் பார்க்க

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் வேலை: காலியிடங்கள்: 63

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Junior... மேலும் பார்க்க

சென்னை ஐஐடியில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!

சென்னையில் உள்ள சென்னை ஐஐடி -இன் தொழில்துறை ஆலோசனை துறையில் நிரப்பப்பட உள்ள இளநிலை அலுவலர் பணிக்கு பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண். ICSR/PR/Advt.64/2025பணி:... மேலும் பார்க்க

தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

புதுதில்லியிலுள்ள தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில்(என்ஐஇஎல்ஐடி) கீழ்வரும் பணிக்கு தகுதியான பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வி... மேலும் பார்க்க

தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்துக் கழகத்தில் வேலை வேண்டுமா?

புதுதில்லியில் செயல்பட்டு வரும் மத்திய அரசு மற்றும் ஹரியாணா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், தில்லி மாநிலங்களின் கூட்டு முயற்சி நிறுவனமான தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்துக் கழகத்தில் நிரப்பப்பட உள்ள 7... மேலும் பார்க்க

பொதுத்துறை நிறுவனத்தில் வேலை: ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

பெங்களூரை தலைமையிடமாகக் கொண்ட இந்திய பொதுத்துறை விண்வெளி மற்றும் பாதுகாப்பு மின்னணு பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியாளர் உதவியாளர் டிரெய்னி பணியிடங்களுக்கு ஐட... மேலும் பார்க்க